Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற கபில் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்ற கபில் குமாருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கபில் குமாரின் சகிப்புத்தன்மை, அர்ப்பணிப்பு, நிலையான மன உறுதி ஆகியவை அவருக்கு இந்தப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், அவரது இந்தச் சிறப்பான செயல்பாட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில், மிகச் சிறந்த நேரத்தைப் பதிவு செய்து கபில் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவரது சகிப்புத்தன்மை, அர்ப்பணிப்பு, நிலையான மன உறுதி ஆகியவை அவருக்கு இந்தப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளன. கபிலின் இந்தச் சிறப்பான செயல்பாட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள்: பிரதமர்”

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326782&reg=3&lang=1

(Release ID: 2326782)

****

TV/SV/SH