பி.எம்.இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தர்மவீர் சௌத்ரி, மனு டி.எஸ், ஜெய் குமார், விஷால் டி.கே ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது ஒரு உத்வேகமான குழு முயற்சி என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்குத் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர், அவர்கள் தொடர்ந்து இந்தியாவைப் பெருமைப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி மற்ற விளையாட்டு வீரர்களுக்குப் பெரும் உத்வேகம் அளிக்கும் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஆடவர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சிறப்பான வெண்கலப் பதக்கம் வென்ற தர்மவீர் சௌத்ரி, மனு டி.எஸ், ஜெய் குமார், விஷால் டி.கே ஆகியோருக்கு வாழ்த்துகள். இது ஒரு உத்வேகமான குழு முயற்சி. அவர்களின் வரவிருக்கும் முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள். அவர்கள் தொடர்ந்து இந்தியாவைப் பெருமைப்படுத்தட்டும். இந்த வெற்றி மற்ற விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதில் பெரும் பங்கு வகிக்கும்: பிரதமர் நரேந்திரமோடி.”
(Release ID : 2317886)
****
TV/PLM/SH