பி.எம்.இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஸ்கிஃப் பாய்மரப் படகுப் போட்டிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரின்ஸ் நோபல், மனு பிரான்சிஸ் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது திறமையாலும் உறுதியாலும் உந்தப்பட்ட ஒரு சிறந்த சாதனை என வர்ணித்துள்ள பிரதமர், இந்த இருவரும் தங்களது முந்தைய செயல்பாடுகளை விஞ்சி பதக்கத்தை வென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
பிரின்ஸ் நோபல், மனு பிரான்சிஸ் ஆகியோரின் எதிர்கால முயற்சிகளுக்குப் பிரதமர் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஒரு சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஸ்கிஃப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரின்ஸ் நோபல், மனு பிரான்சிஸ் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
அவர்கள் தங்களின் முந்தைய செயல்பாடுகளை விட சிறப்பாகச் செயல்பட்டு, இம்முறை பதக்கம் வென்றுள்ளனர். இது திறமையாலும் உறுதியாலும் உந்தப்பட்ட ஒரு சிறந்த சாதனையாகும். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி”
—-
(Release ID: 2317676)
TV/PLM/SH
A special and spectacular Silver!
— PMO India (@PMOIndia) October 1, 2026
Congrats to Prince Noble and Manu Francis on winning the Silver Medal in the Men’s Skiff event at the Asian Games 2026.
They bettered their previous performances and did well by reaching the podium this time. It has truly been a remarkable…