Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகளாவிய சுற்றுலாத் தலங்களின் மையமாக இந்தியா உருவெடுத்து வருவது குறித்த ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் எழுதிய ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.

சிறந்த போக்குவரத்து இணைப்பு, மேம்படுத்தப்பட்ட சுற்றுலா வசதிகள், எளிதான டிஜிட்டல் அணுகல் ஆகியவற்றின் ஆதரவுடன், உலக சுற்றுலா வரைபடத்தில் இந்தியாவின் எழுச்சியை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் கூறியுள்ளர். இந்த வளர்ச்சி, உள்ளூர் வணிகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், கைவினைஞர்கள், உள்ளூர் சமூகங்கள் ஆகியோருக்குப் புதிய வாய்ப்புகளைத் வழங்குகிறது என்றும் அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாவின் அடுத்த கட்டத்திற்கு நிலைத்தன்மையை ஒரு முக்கிய அம்சமாக இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது எனவும் அவர் கூறியுள்ளார். இது இந்தியாவின் வளமான பாரம்பரியத்தைப் பொருளாதார வாய்ப்புகளுடன் இணைத்து, சுற்றுலாப் பயணிகளுக்குச் சிறந்த அனுபவங்களையும் உருவாக்குகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“உலக சுற்றுலா வரைபடத்தில் இந்தியாவின் எழுச்சியானது, சிறந்த போக்குவரத்து இணைப்பு வசதிகள், மேம்படுத்தப்பட்ட சுற்றுலா வசதிகள், எளிதான டிஜிட்டல் அணுகல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது” என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுதியுள்ளார். இந்த வளர்ச்சி, உள்ளூர் வணிகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், கைவினைஞர்கள், உள்ளூர் சமூகங்கள் ஆகியோருக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.

சுற்றுலாவின் அடுத்த கட்டத்தின் மையமாக நிலைத்தன்மை விளங்குவதால், இந்தியா தனது வளமான பாரம்பரியத்தை பொருளாதார வாய்ப்புகளுடன் இணைப்பதோடு, பயணிகளுக்குச் சிறந்த அனுபவங்களையும் உருவாக்கி வருகிறது.”

—–

(Release ID : 2317644)

TV/PLM/SH