பி.எம்.இந்தியா
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி-யின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, கேப்டன் ஸ்மித் மாச்சர், துணிச்சலின் மிக உயர்ந்த வடிவத்தை உலகிற்குக் காட்டியுள்ளதாகப் பாராட்டுத் தெரிவித்தார்.
வீரமாகப் போராடிய கேப்டன் மாச்சர் தன் உயிருக்கு அஞ்சாமல், 9/11 (நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல்) போன்ற மற்றொரு தாக்குதல் நடப்பதைத் தடுத்துள்ளதாகப் பிரதமர் கூறினார்.
140 கோடி இந்தியர்கள் கேப்டன் ஸ்மித் மச்சருக்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும், அவரது நல்வாழ்விற்காகப் பிரார்த்தனை செய்வதாகவும் திரு நரேந்திர மோடி கூறினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“கேப்டன் ஸ்மித் மாச்சர், துணிச்சலின் மிக உயர்ந்த வடிவத்தை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.
தன் உயிருக்கு அஞ்சாமல், அவர் வீரமாகப் போராடி, 9/11 போன்ற மற்றொரு தாக்குதல் நடப்பதைத் தடுத்துள்ளார்.
140 கோடி இந்தியர்கள் கேப்டன் ஸ்மித்துக்குப் பாராட்டுத் தெரிவிப்பதோடு, அவரது நலனுக்காகவும் பிரார்த்திக்கின்றனர்.”
—
(Release ID: 2317641)
TV/PLM/SH
Captain Smit Machchhar has shown the world the highest form of courage.
— Narendra Modi (@narendramodi) October 1, 2026
Without fearing for his own life, he fought valiantly and prevented another 9/11 like attack from happening.
140 crore Indians salute Captain Smit and are praying for his well-being. pic.twitter.com/YGTA9CFCAg