Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணிக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அணியின் உத்வேகமான முயற்சியைப் பாராட்டியுள்ள பிரதமர், வீரர்கள் பதக்கம் பெற மிகுந்த மன உறுதியை வெளிப்படுத்தினர் என்றும் கூறியுள்ளார்.

இந்த வெற்றி, இந்தியாவில் பிரபலமாகி வரும் ஸ்குவாஷ் விளையாட்டில் ஈடுபட இளைஞர்களை ஊக்குவிக்கும் என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணியை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். அவர்களின் உத்வேகமான முயற்சிக்கு வாழ்த்துகள். அவர்கள் மிகுந்த உறுதியுடன் விளையாடி, பதக்கம் பெற்றுள்ளனர். இந்த வெற்றி, இந்தியாவில் பிரபலமாகி வரும் ஸ்குவாஷ் விளையாட்டின் மீது இளைஞர்களுக்கு ஈடுபாட்டை அதிகரிக்கும்: பிரதமர் நரேந்திரமோடி”

—–

(Release ID : 2317668)

TV/PLM/SH