பி.எம்.இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஸ்கிஃப் பாய்மரப் படகுப் போட்டிப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹர்ஷிதா தோமர், ஷீதல் வர்மா ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் இந்தியாவை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றதோடு, முந்தைய செயல்திறனையும் அவர்கள் விஞ்சியிருப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார்.
ஹர்ஷிதா தோமர், ஷீதல் வர்மா ஆகியோரின் எதிர்கால முயற்சிகளுக்குத் தமது நல்வாழ்த்துகளைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஸ்கிஃப் பாய்மரப் படகுப் போட்டிப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹர்ஷிதா தோமர், ஷீதல் வர்மா ஆகியோருக்கு வாழ்த்துகள்! தங்கள் உறுதியாலும் விடாமுயற்சியாலும், அவர்கள் இந்தியாவை பதக்க வாய்ப்புக்கு அழைத்துச் சென்றதுடன், முந்தைய செயல்திறனையும் அவர்கள் விஞ்சியுள்ளனர். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி”
(Release ID: 2318112)
****
TV/PLM/SH
Congratulations to Harshita Tomar and Shital Verma on winning the Bronze Medal in the Women’s Skiff event at the Asian Games! With determination and consistency, they have taken India onto the podium and also bettered the previous performance. Best wishes to them for their future…
— PMO India (@PMOIndia) October 2, 2026