Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ரிகர்வ் வில்வித்தை குழுப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அங்கிதா பகத், கும்கும் அனில் மொஹோத், கீர்த்தி ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ரிகர்வ் வில்வித்தை குழுப் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற அங்கிதா பகத், கும்கும் அனில் மொஹோத், கீர்த்தி ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

கடுமையான இறுதிப் போட்டியில் அவர்களின் நிதானமும் துல்லியமும் பாராட்டத்தக்கவை என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் வில்வித்தை வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தியா தனது சாதனையாளர்களை நினைத்துப் பெருமை கொள்கிறது என்று கூறியுள்ள திரு நரேந்திர மோடி, அங்கிதா பகத், கும்கும் அனில் மொஹோத், கீர்த்தி ஆகியோரின் எதிர்கால முயற்சிகளுக்குத் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

“ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்வித்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் இது.

 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ரிகர்வ் குழுப் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற அங்கிதா பகத், குங்கும் அனில் மொஹோத், கீர்த்தி ஆகியோருக்கு வாழ்த்துகள். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர்களின் நிதானமும் துல்லியமும் குறிப்பிடத்தக்கவை. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் வில்வித்தை வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும். நமது வெற்றியாளர்கள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது! அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி”

 

(Release ID : 2318113)

****

TV/PLM/SH