பி.எம்.இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 97 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவில் கடும் போட்டிக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்ற தீபக் புனியாவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் 97 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவில் இந்தியா மீண்டும் பதக்கம் வென்றுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தீபக் புனியாவின் சாதனை, இந்தியாவின் மல்யுத்தப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்த்துள்ளது என்றும், வரும் காலங்களில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துவதாகவும் திரு நரேந்திழ மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் 97 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவில் இந்தியா மீண்டும் பதக்கம் வென்றுள்ளது!
கடும் போட்டிக்குப் பிறகு தீபக் புனியா வெண்கலப் பதக்கத்தை வென்று, இந்தியாவின் மல்யுத்தப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்த்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். வரும் காலங்களில் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்: பிரதமர் நரேந்திரமோடி”
***
(Release ID: 2318742)
TV/PLM/RJ
Six decades later, India is back on the podium in the Men’s 97kg Freestyle Wrestling event at the Asian Games!
— PMO India (@PMOIndia) October 3, 2026
Deepak Punia has brought home the Bronze after a fiercely contested bout, adding a new chapter to India’s wrestling journey. Congrats to him. May he keep attaining…