Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுதந்திரப் போராட்ட வீரர் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, மாபெரும் புரட்சியாளரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பாரத அன்னையின் மீதான அடக்குமுறைத் தளைகளை உடைப்பதற்காக ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா தமது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்று பிரதமர் கூறியுள்ளார்.

தாய்நாட்டின் பெருமையைப் பாதுகாப்பதில் அவரது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் தேசம் ஒருபோதும் மறக்காது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“மாபெரும் புரட்சியாளரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்தநாளில் அவருக்குப் பணிவுடன் மரியாதை செலுத்துகிறேன்.  பாரத அன்னையின் அடிமைத் தளைகளை உடைப்பதற்காக அவர் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். தாய்நாட்டின் சுயமரியாதையைக் காக்க அவர் வெளிப்படுத்திய வீரத்தையும் துணிவையும் நன்றியுள்ள தேசம் ஒருபோதும் மறக்காது.”

****

(Release ID: 2318811)

TV/PLM/RJ