Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அமன் செராவத்திற்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டியில் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவில், இந்தியாவின் முதல்  தங்கப் பதக்கத்தை வென்ற அமன் செராவத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றதிலிருந்து, இந்தமுறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது வரை, அமன் செராவத் விடாமுயற்சியை வெளிப்படுத்தியுள்ளார் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அமன் செராவத்திற்கு மகத்தான வெற்றி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவில், இந்தியா சார்பில் முதல்  தங்கப் பதக்கத்தை வென்று அமன் செராவத் சரித்திரம் படைத்துள்ளார். கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதிலிருந்து, இந்தமுறை முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளது வரை, அமன் விடாமுயற்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி”

****

(Release ID: 2318741)

TV/PLM/RJ