Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆடவர் பேட்மிண்டன் அணிக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆடவர் பேட்மிண்டன் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.

இந்தப் பதக்கம், வீரர்களின் ஆர்வத்தையும் கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், போட்டி முழுவதும் ஒட்டுமொத்த அணியினரும் சிறந்த மன உறுதியை வெளிப்படுத்தியதாகக் கூறினார். மேலும், எதிர்வரும் போட்டிகளுக்காக அவர்களுக்குத் தனது நல்வாழ்த்துகளையும் திரு மோடி தெரிவித்தார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டதாவது:

“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற நமது ஆடவர் பேட்மிண்டன் அணிக்கு வாழ்த்துகள்!

இந்தப் பதக்கம் வீரர்களின் ஆர்வத்தையும் கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது. போட்டி முழுவதும் அணியினர்  சிறப்பான மன உறுதியை வெளிப்படுத்தினர்.

எதிர்வரும் போட்டிகளில் அவர்கள் சிறப்பாக செயல்பட நல்வாழ்த்துகள்.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314532&reg=3&lang=1

****

SS/BR/SH