Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிரியர் பணி நிலை அவசரச் சட்டம் 2019-ல் இடஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பல்கலைக்கழகம் / கல்லூரி என்பது “துறை அல்லது பாடப்பிரிவு” என பல பிரிவுகளாக அடையாளம் காணப்படுவதற்கு பதிலாக ஒரு அலகு என்று கருதப்படுவதற்கு “மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்கள் பணி நிலையில் இடஒதுக்கீடு) அவசரச் சட்டம் 2019” பிரகடனப்படுத்தப்படுவதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தள்ளது.
தாக்கம் :

இந்த முடிவு திறமையான, தகுதியுள்ள மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் உயர் கல்வி நிறுவனங்களின் பயிற்றுவிக்கும் தரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயன்கள் :

இந்த முடிவு ஆசிரியர் பணி நிலையில் 5,000-த்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வழி வகுப்பதோடு, அரசியல் சட்டத்தின் 14, 16, 21 ஆகிய பிரிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும். மேலும், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் / பழங்குடியினர் மற்றும் சமூகம் மற்றும் கல்வியைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வரையறுக்கப்பட்ட இடஒதுக்கீட்டை தருவதற்கு உதவும்.

*****