Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற ரோஹன் போபண்ணா, திவிஜ் ஷரன் ஆகியோருக்கு பிரதமர் பாராட்டு


இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தா – பாலெம்பாங்-கில் நடைபெறும் 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் ஆட்டத்தில் தங்கம் வென்ற ரோஹன் போபண்ணா, திவிஜ் ஷரன் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

“ரோஹன் போபண்ணாவும், திவிஜ் ஷரனும் விளையாடும்போது மிகச் சிறந்த டென்னிஸ் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். ஆடவர் இரட்டையர் பிரிவில் அவர்களுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது மிகவும் தகுதியானது. இந்த விளையாட்டு வீர்ர்களுக்கு வாழ்த்துக்கள்.” என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****