பி.எம்.இந்தியா
பாரீஸ் பாராலிம்பிக் 2024 போட்டியில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச்1 – பி1 பிரிவில் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச்1 – பி1 பிரிவில் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றது அற்புதமான சாதனையாகும். அவருடைய துல்லியம், குறிக்கோள், அர்ப்பணிப்பு ஆகியவை மீண்டும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளன. #பாரதத்திற்கு உற்சாகம்”
****************
TS/IR/KPG/KV
A splendid achievement by Manish Narwal, as he wins the Silver in the P1 Men's 10m Air Pistol SH1 event. His precision, focus and dedication have once again brought glory. #Cheer4Bharat
— Narendra Modi (@narendramodi) August 30, 2024