பி.எம்.இந்தியா
ஆப்கானிஸ்தானில் நேற்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“நேற்று ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது ஆப்கானிஸ்தானின் பன்முக கலாச்சாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த துயர நேரத்தில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது”, என்று அவர் கூறினார்.
****
We strongly condemn the terror attacks in Afghanistan yesterday. They are an attack on Afghanistan's multicultural fabric. My thoughts are with the bereaved families. I pray that the injured recover soon. India stands ready to assist the Afghanistan government in this sad hour.
— Narendra Modi (@narendramodi) July 2, 2018