Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆயத்த ஆடைகள் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கான சீர்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஆயத்த ஆடைகள் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கான சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்த்து.

1. ஆயத்த ஆடைகள் தொகுப்புத் திட்டங்களுக்கான ரூ. 6,006 கோடி அனுமதிக்கப்பட்ட பட்ஜெட்டுக்கு உட்பட்டு காலக்கெடுவுடன் கூடிய கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2. ஆயத்த ஆடைகள் துறைக்கு பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு பெருக்க திட்டத்தை விரிவுபடுத்துதல். இதன் மூலம் வேலை வழங்குவோர் பங்கினை பிரதம மந்திரி வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் வழங்கப்படும் 8.33 சதவீதத்திற்கும் கூடுதலாக 3.67 சதவீதத்தை இந்த துறைக்கு வழங்குதல். புதிதாகச் சேர்ந்த ஊழியர்கள், ஊழியர்கள் வருங்கால வைப்புநிதி அமைப்பில் சேர்ந்த முதல் மூன்று ஆண்டுகளில் சிறப்பு ஊக்குவிப்பாக இந்த பங்கு ஆயத்த ஆடைகள் துறைக்கு வழங்கப்படுகிறது.

3. ஆயத்த ஆடைகளுக்கான மாநில வரிகளில் தள்ளுபடி வழங்கும் திட்டத்தை தனிநபர் அலங்காரப் பொருட்கள் துறைக்கும் விரிவுபடுத்துதல். இதன் மூலம் இத்துறையின் ஏற்றுமதிகள் மீதான வரியைத் திரும்ப பெறுவது அதிகரிக்கப்படும்.

4. தொழிலாளர் நலச் சட்டங்களை எளிமைப்படுத்துதல்:

(i) ஆயத்த ஆடைகள் உற்பத்தி துறையில் ஒவ்வொரு கால ஆண்டுக்கும் ஊதியத்துடன் கூடிய கூடுதல் பணி நேரத்தை நூறு மணி நேரமாக உயர்த்துதல்

(ii) மாதம் ரூ 15,000 – த்திற்கும் குறைவாக ஊதியம் பெறும் ஊழியர்கள், ஊழியர்கள் வருங்கால வைப்புநிதியில் சேருவதை அவர்களது விருப்பத்தின்படி அமைத்தல்.

இந்த திட்டங்கள் ஜவுளித்துறையில் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 11 லட்சம் வரை புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். ஏற்றுமதிகள் அதிகரிக்கும். ஜவுளி மற்றம் ஆயத்த ஆடைத்துறையில் ஊழியர்களுக்கு பயன்கள் அதிகரிக்கும்.