Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆரோக்கியத்தை உறுதி செய்யும் பிரதமரின் திட்டத்தின் கீழ் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள்


மகாராஷ்டிராவின் நாக்பூர், ஆந்திர பிரதேசத்தின் மங்களகிரி, மேற்கு வங்களாத்தின் கல்யாணி ஆகிய இடங்களில் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் பிரதமரின் திட்டத்தின் கீழ் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ. 4949 செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வி, செவிலியர் கல்வி மேல் குறிப்பிட்டுள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் சுகாதார வசதியை வழங்கும் வகையில் தேசியளவில் முக்கியத்துவம் கொண்ட புதிய எய்ம்ஸ் (அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம்) அமைக்கப்படும். இந்நிறுவனங்களில் 960 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் அமைக்கப்படும். கூடுதலாக பயிற்சி பிரிவு, நிர்வாக பிரிவு, ஆயுஷ் பிரிவு, அரங்கம், செவிலியர் கல்லூரி, இரவு தங்கும் வசதி, தங்கும் விடுதி, குடியிருப்பு வசதி ஆகியவை அமைக்கப்படும்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மொத்த செலவினமான ரூ. 4949 கோடியில் ஆந்திர பிரதேசத்தின் மங்களகிரிக்கு ரூ.1618 கோடியும் மகாராஷ்டிராவின் நாக்பூருக்கு ரூ1577 கோடியும் மேற்கு வங்காளத்தின் கல்யாணிக்கு ரூ.1754 கோடியும் வழங்கப்படும்.

எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுவதால் அப்பகுதியில் உள்ள எளிதாக கிடைக்கக்கூடிய மருத்துவ வசதியின் ஏறத்தாழ்வு மற்றும் நம்பகத்தன்மை உள்ள மூன்றாம் நிலை சுகாதார மையங்கள் சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும். மருத்துவக் கல்வியின் தரம், இப்பகுதியில் குறைந்த அளவில் உள்ள மருத்துவம் சார்ந்த நிபுணர்களின் பற்றாக்குறை ஆகியவற்றை இது மேம்படுத்தும்.

அதிக அளவில் மக்கள் தொகை கொண்ட ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா (விதர்பா), மேற்கு வங்காளம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்கள், பகுதிகள் இத்திட்டத்தின் பயனாளிகளாக இருப்பார்கள்.

பிரதமரின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. ரே பரேலியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.

பின்னணி

மத்திய நிதித் துறை அமைச்சர் நிதி நிலை அறிக்கை 2014 – 15ல் கூறியதன்படி இவ்விடங்களில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஆந்திர பிரதேசத்தின் மறு அமைப்புச் சட்டம் 2014ல் குறிப்பிட்டபடி எய்ம்ஸ் போன்ற நிறுவனம் அமைக்கப்படுவதற்கான வசதி உள்ளது என்ற உறுதியை இது நிறைவேற்றுகிறது.

***