Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விளையாட்டு நிகழ்வைக் காண மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் சென்றிருந்தார்

விளையாட்டு நிகழ்வைக் காண மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் சென்றிருந்தார்


இந்தியா – ஆஸ்திரேலியா விளையாட்டு உறவுகளைக் கொண்டாடும் நிகழ்வை காண்பதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோனி அல்பானீஸ், விக்டோரியா முதல்வர் ஜசிந்தா ஆலன் ஆகியோருடன் இணைந்து இன்று மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றிருந்தார். இந்த நிகழ்வில், திரு ஸ்டீவ் வா, லிசா ஸ்தலேகர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய விளையாட்டு ஆளுமைகள் பலர் பங்கேற்றனர். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மையின் தூண்களாக விளங்கும் விளையாட்டுகள், கலாச்சார பரிமாற்றங்கள், மக்களிடையேயான உறவு ஆகியவற்றில் அதிகரிக்கும் முக்கியவத்துவத்தை இந்தப் பயணம் குறிப்பிடுகிறது.   

இந்த நிகழ்வின் போது, விளையாட்டுப் பயிற்சித் துறை, திறன் கட்டமைப்பு, விளையாட்டு அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு தொழில்துறை, முதலீடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்தியா – ஆஸ்திரேலியா விளையாட்டு ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை இரு பிரதமர்களும் கூட்டாக வெளியிட்டனர். இந்தத் திட்டம், இந்தியா – ஆஸ்திரேலியா இளையோர் விளையாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. விளையாட்டுத் துறையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

நிகழ்வில் கூடியிருந்தோர் இடையே உரையாற்றிய பிரதமர் திரு மோடி, மக்களை ஒருங்கிணைப்பதில் விளையாட்டின் தனித்துவ பங்களிப்பை எடுத்துரைத்தார். இந்த செயல்திட்டம், இருநாடுகளின் விளையாட்டு கூட்டாண்மையை பெருக்குவதற்கு உதவும் என்று அவர் குறிப்பிட்டார். மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதற்காக ஆஸ்திரேலியாவை அவர் பாராட்டினார். 2030-ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவும், 2032-ல் பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டிகளை ஆஸ்திரேலியாவும் நடத்தும் நிலையில், சர்வதேச விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க தசாப்தத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து நுழைவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த வளர்ச்சிப் போக்குகள் விளையாட்டுகள், அவை சார்ந்த தொழில்துறைகளில் நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்புக்கு இயற்கையான வாய்ப்புகளை உருவாக்குவதாக அவர் எடுத்துரைத்தார்.

இந்தப் பயணத்தின் போது, கபடி, ஆஸ்திரேலிய கால்பந்து, கிரிக்கெட் காட்சி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இளம் விளையாட்டு வீரர்களுடன் இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

இந்தப் பயணம் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான துடிப்புமிக்க விளையாட்டு, மக்களுக்கு இடையேயான தொடர்புகளை வெளிப்படுத்தியது.

***

(Release ID: 2283115)

SS/SMB/RJ/KR