பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, மிலாதுன் நபி பெருநாளில் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தப் புனிதமிக்க நாள் ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தி, எங்கும் மகிழ்ச்சியைப் பரப்பும் என்று திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், கருணை, சமுதாயத்திற்குத் திருப்பிக் கொடுக்கும் மனப்பான்மை ஆகியவை எப்போதும் அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
“ஈத் முபாரக்!
மிலாதுன் நபி நல்வாழ்த்துகள். இந்த நன்நாள் நம்மைச் சுற்றிலும் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் மேலும் வளர்க்கும் என்று நம்புகிறேன். கருணை, சமுதாயத்திற்குத் திருப்பிக் கொடுக்கும் மனப்பான்மை ஆகியவை எப்போதும் நமக்கு வழிகாட்டட்டும்.”
(Release ID: 2303398)
****
SS/PLM/SH
Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) August 26, 2026
Greetings on Milad-un-Nabi. I hope this occasion furthers togetherness and joy all around us. May the spirit of kindness and giving back to society always guide us.