Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன தினம்: பிரதமர் வாழ்த்து


அனைத்து ஸ்வயம் சேவகர்களுக்கும் (தொண்டர்கள்) ஆர்எஸ்எஸ் நிறுவன தின சிறப்பு நிகழ்வில்

பிரதமர் திரு நரேந்திர மோடி

 இன்று (20.10.2026)

 தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அத்துடன்  நாக்பூரில் நூறாவது ஆண்டு (சதாப்தி வர்ஷ்) ஸ்ரீ விஜயதசமி விழாவின்போது ஆர்எஸ்எஸ் தலைவர் திரு மோகன் பகவத் ஆற்றிய ஊக்கமூட்டும் உரையைப் பகிர்ந்துள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

 

“இன்று, ஆர்எஸ்எஸ் நிறுவன தினத்தில் சிறப்புமிக்க நல்வாய்ப்பில், அனைத்து ஸ்யம்சேவகர்களுக்கும் (தொண்டர்கள்) எனது வாழ்த்துகள். பல ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ்-ஐ வளர்த்தெடுத்த அனைத்து மகான்களுக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ஆர்எஸ்எஸ் சேவை, தேச நிர்மாணம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றில் ஒரு நூற்றாண்டை நிறைவு செய்துள்ளது. எண்ணற்ற சுயம்சேவகர்கள் ஆழ்ந்த கடமையுணர்வுடனும், தேசமே முதன்மை என்ற மனப்பான்மையுடனும் சமூகத்திற்காகப் பணியாற்றுகின்றனர்.

 

இந்த உணர்வு வரும் காலங்களிலும் தேசிய வளர்ச்சியைத் தொடர்ந்து வலுப்படுத்தட்டும்.

 

“ழநாக்பூரில் சதாப்தி வர்ஷ் (நூறாவது ஆண்டு) ஸ்ரீ விஜயதசமி விழாவின் போது ஆர்எஸ்எஸ் தலைவர் திரு மோகன் பகவத் ஆற்றிய மிகவும் ஊக்கமளிக்கும் உரை.

 

தேசிய முன்னேற்றம், சமூக ஒற்றுமை, சுயசார்பின் அவசியம், சமூகத்தின் குணநலனை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார்.

 

ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் ஸ்யம்சேவக்கிற்கும் இன்றியமையாததான சேவை, தேசத்தைக் கட்டியெழுப்பும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு அவர் முக்கியத்துவம் அளித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் அவர், ஐந்து மாற்றங்கள் (பஞ்ச பரிவர்த்தன்) குறித்தும், அவை நேர்மறையான சமூக மாற்றத்திற்கு எவ்வாறு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முடியும் என்பது குறித்தும் பேசியுள்ளார்.”

 

(Release ID : 2325389)

****

SK/PLM/SH