பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இடம் பெயரும் அறிய வகை பறவைகளை பாதுகாப்பதற்காக ஆப்பிரிக்கா மற்றும் யூரேசியா நாடுகளுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தம், ராப்டார் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றும் அழைக்கப்டுகிறது. இது பறவைகளை பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், இந்தியா இவ்வாறு கையெழுத்திடும் 54வது நாடாகும்.
பின்னணி :
ராப்டார் புரிந்துணர்வு ஒப்பந்தம் 1 நவம்பர் 2008ல் அமலுக்கு வந்து, 22 அக்டோபர் 2008ல் நிறைவு பெற்றது. ராப்டார் ஒப்பந்தம், பறவைகளை பாதுகாப்பதற்கான மாநாட்டுத் தீர்மானத்தின் பிரிவு 4 மற்றும் பத்தி 4ல் உள்ளது. இது சட்டரீதியாக பிணைக்க முடியாதது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், அரிய வகை இடம் பெயரும் பறவைகளையும், இதர உயிரினங்களையும், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் பாதுகாக்க விரும்புகிறதா என்று விருப்பத்தை கேட்கும். அறிய வகை உயிரினங்களை பாதுகாப்பதற்காக ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 76 வகையிலான பறவைகளை பாதுகாக்க விழைகிறது. வல்லூறு, கழுகு, ஆந்தை, பருந்து, போன்ற 46 வகை பறவைகள் இந்தியாவிலேயே உள்ளன.
இந்திய வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972க்கு ஏற்றவகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. இந்த சட்டத்தின்படி, ஏற்கனவே இந்த பறவைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்து. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், இந்தியா, பறவைகள் தங்குமிடங்கள் போன்றவை குறித்த தகவல்களை அறிந்து, அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இதர நாடுகளோடு இணைந்து, எல்லை தாண்டி பறவைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பாகிஸ்தான் மற்றும் நேபாளம், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அண்டை நாடுகளாகும்.
பான் ஒப்பந்தம் அல்லது பறவைகள் பாதுகாப்பு ஒப்பந்தம், ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் திட்டத்தின் கீழ், அறிய வகை இடம் பெயரும் பறவைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. 1 நவம்பர் 1983 முதல், பறவைகள் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்துள்ளது.