Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவிற்கும் லிதுவேனியாவிற்கும் இடையே விவசாயத் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியாவிற்கும் லிதுவேனியாவிற்கும் இடையே விவசாயத் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட தனது ஒப்புதலை வழங்கியது.

தோட்டக்கலை உள்ளிட்ட விவசாய உற்பத்தி, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, இயற்கை விவசாயம், குளிர்பதன வசதிகளை மேம்படுத்துவது, விவசாயப் பொருட்கள் தொடர்பான பதனிடுதல் தொழில், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன், இறால் போன்ற நீராதார உயிரிகள் வளர்ப்பு போன்ற விவசாய உற்பத்தித் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை வழங்குவதாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமையும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கங்களை செயல்படுத்த பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் இரண்டாண்டு வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு உருவாகும்.

உற்பத்தித் திறனை வளர்ப்பது, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிபுணர்களின் அறிவுத்திறனை பயன்படுத்திக் கொள்வது, உயிர்ம ஆதாரங்களை பரிமாறிக் கொள்வது, பொருத்தமான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பது, விளைநிலத்தில் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான விவசாய செயல்பாடுகள் ஆகிய முயற்சிகளுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

*****