Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவில் தயாரிப்போம் மையத் துவக்க விழாவின் போது பிரதமரின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன

இந்தியாவில் தயாரிப்போம் மையத் துவக்க விழாவின் போது பிரதமரின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன


1) டுவின் ஸ்டார் (தாய் நிறுவனம்; ஸ்டெர்லைட்) நிறுவனத்திற்கும் மகாராஷ்டிரா தொழிலியல் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் எல்.சி.டி. வடிவமைப்பில் முதலீடு செய்ய வகை செய்கிறது. இத்திட்டத்தில் தைவான் நாட்டின் ஆட்ரான் நிறுவனம் தொழில்நுட்ப பங்குதாரராக இருக்கும். இந்த வகையில் இந்தத் திட்டம் இந்தியாவில் முதலாவது ஆகும். திட்டத்திற்கான உத்தேச முதலீடு ரூ. 20,000 கோடி.

2) இந்துஸ்தான் கொக்கோகோலா பானங்கள் நிறுவனம், ஜெயின் நீர்ப்பாசன நிறுவனம் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசின் வேளாண் மார்கெட்டிங் துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி விதர்பா பகுதியைச் சேர்ந்த ஆரஞ்சு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பழச்சாறு உற்பத்தி வசதி அமைக்கப்படும். இத்திட்டத்தினால் ஆரஞ்சு விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைப்பதுடன் ஆதாயப் பூர்வமான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன. இத்திட்டத்தினால் சராசரி 2 ஏக்கர் நிலம் வைத்துள்ள 5000 விவசாயிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

3) ‘பண்ணை முதல் ஆடை வரை’ திட்டத்தின் ஒரு பகுதியாக ரேமண்ட் தொழில் நிறுவனத்துக்கும் மகாராஷ்டிரா தொழிலியல் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் படி ரேமண்ட் நிறுவனம் லினன் நூல், துணி மற்றும் ஆடைகள் உற்பத்திக்காக ரூ. 1,400 கோடி முதலீடு செய்ய உத்தேசித்துள்ளது. இதற்கான உற்பத்திப் பிரிவு அமராவதி மாவட்டம் நந்தகோவன் ஜவுளிப் பூங்காவில் உருவாக்கப்படும். இந்தத் தொழிற்சாலை அமராவதி மாவட்டம் மற்றும் விவசாயிகள் தற்கொலை மற்றும் விவசாயிகள் பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள விதர்பா பகுதி விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்யும்.

*******