Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவில் துருக்கி அதிபரின் அரசுமுறைப் பயணத்தின் போது பிரதமர் அளித்த ஊடக அறிக்கை

இந்தியாவில் துருக்கி அதிபரின் அரசுமுறைப் பயணத்தின் போது பிரதமர் அளித்த ஊடக அறிக்கை


துருக்கி குடியரசின் அதிபர் மேன்மைக்குரிய அதிபர் ரிசெப் டாய்யிப் எர்டோகன் அவர்களே,

ஊடகத் துறையினரே,

துருக்கி அதிபர் எர்டோகன் அவர்களுக்கும், அவருடைய குழுவினருக்கும் அன்பான வரவேற்பு தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேன்மைக்குரியவரே,

துருக்கி நாட்டுக்கு 2015 நவம்பரில் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு வந்ததை என்றும் நான் நினைவில் வைத்திருப்பேன். உங்கள் அழகிய நாட்டுக்கு வந்தபோது நான் அனுபவித்த அன்பான உபசரிப்பு மற்றும் நல்லெண்ணத்துக்கு, பிரதி உபகாரம் காட்டுவதற்கு உங்களுடைய இந்தப் பயணம் எங்களுக்கு ஒரு வாய்ப்பாக இருந்தது.

நண்பர்களே,

இந்தியா மற்றும் துருக்கி மக்களுக்கு இடையே ஆழமான மற்றும் வரலாற்று கால பிணைப்புகள் உருவாக்கியுள்ளனர். கலாச்சாரம் மற்றும் மொழி அடிப்படையிலான தொடர்புகள் பல நூறு ஆண்டுகளாக நமது சமூகங்களை இணைத்துள்ளன.

கவிஞர் ரூமி துருக்கியில் தனது இருப்பிடமாக ஆக்கிக் கொண்டுள்ளபோதிலும், அவருடைய போதனைகள் இந்தியாவிலும் சுஃபி மரபை மேம்படுத்தியுள்ளன.
நண்பர்களே, நமது இன்றைய விரிவான கலந்துரையாடல்களில், அதிபர் எர்டோகனும் நானும், நமது உறவுகள் பற்றி, குறிப்பாக நமது அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார பங்கேற்பு குறித்து முழுமையாக பேசினோம். நமது பிராந்தியத்தில் வளர்ச்சிகளுக்கான வாய்ப்புகள் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம்.

நண்பர்களே,

இந்தியாவும், துருக்கியும் இரண்டு பெரிய பொருளாதார நாடுகள். நமது நாடுகளுக்கு இடையில் வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் வலுப்படுத்துதலுக்கு அபரிமிதமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது என்பது நமது பொருளாதாரங்களின் பலம் என்று அதிபரும் நானும் தெளிவுபடுத்திக் கொண்டோம். திட்டமிட்ட மற்றும் நீண்டகால அடிப்படையில் முழுமையான வணிக வாய்ப்புகளின் வளர்ச்சிகள் குறித்து இரு அரசுகளின் அளவில் அணுகிட வேண்டும் என்று நானும் கருதுகிறேன். நமது பொருளாதாரங்களின் ஒருங்கிணைப்பை கருத்தில் கொண்டால் 6 பில்லியன் டாலர்கள் என்ற நமது இருதரப்பு வர்த்தக விற்றுமுதலானது, போதுமானதாக இல்லை. இருதரப்பிலும் தொழில் மற்றும் வணிகத்தில் இன்னும் நிறைய செய்யலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதிபர் எர்டோகனுடன் உயர் நிலைக் குழு ஒன்றும் வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் இருவரும் அவர்கள் மத்தியிலும், இந்தியத் தொழில் துறை முன்னோடிகள் மத்தியிலும் இன்று காலையில் பேசினோம்.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் உட்பொதிந்துள்ள பரவலான மற்றும் தனித்துவமான வாய்ப்புகளை துருக்கிய வணிகத் துறையினர் விரைவில் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகள், இன்று காலையில் வணிக உச்சி மாநாட்டில் சிலவற்றை நான் பட்டியலிட்டேன். ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்குவதில் எங்களுடைய லட்சியம் ஆகியவை துருக்கிய திறன்களுக்கு பொருத்தமாக உள்ளதாகவும் நான் நம்புகிறேன்.
எங்களது மிகுந்த விருப்பமான திட்டங்கள் மற்றும் பணிகளில், தாங்களாகவோ அல்லது இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்தோ, துருக்கிய நிறுவனங்கள் பலமான பங்கேற்பை ஊக்குவிக்க நாங்கள் விரும்புகிறோம்.

இன்று கையழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களும், நமது கலந்துரையாடலில் இடம் பெற்ற பொருட்களும் நமது இரு நாடுகளுக்கும் இடையில் நிறுவனங்களுக்கு இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்பதில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை.
நண்பர்களே,

ஒவ்வொரு நாளும் நமது சமூகங்களில் புதிய ஆபத்துகளும், சவால்களும் உருவாகிக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். தற்போதுள்ள சில சூழ்நிலை மற்றும் செயல்பாட்டு வரம்புகளும், உலகளாவிய அளவில் உருவாகிவரும் பாதுகாப்பு சவால்களும் நம்முடைய பொதுவான பிரச்சினைகளாக உள்ளன.
குறிப்பாக, பயங்கரவாதத்தால் தொடர்ந்து உருவாகும் அச்சுறுத்தல் நமக்கு கவலை தரக்கூடியதாக உள்ளது. இந்த விஷயம் குறித்து அதிபருடன் நான் விரிவாக கலந்துரையாடினேன். பயங்கரவாதத்தை எந்தவொரு எம்ணமோ அல்லது நோக்கமோ அல்லது எந்த நியாயமோ எந்தக் காரணமோ அதை சரியானதாக ஆக்கிட முடியாது என்பதை இருவரும் ஒப்புக்கொண்டோம்.

எனவே, தீவிரவாத நெட்வொர்க்குகளையும், அவற்றுக்கு நிதி கிடைக்கும் வழிகளையும் சிதைத்து, எல்லைகளைக் கடந்து தீவிரவாதிகள் செல்வதைத் தடுத்து முற்றுப்புள்ளி வைக்கவும், உலக நாடுகள் ஒன்றாகப் பாடுபட வேண்டும். இத்தகைய செயல்பாடுகளை, வன்முறை சித்தாந்தங்களை சிந்தித்து உருவாக்குபவர்களுக்கும், ஆதரவளித்து உதவுவோருக்கும், புகலிடம் தந்து பரப்புவோருக்கும் எதிராக அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.

இந்தப் பிரச்சினையை சிறப்பாக சமாளிக்க, இருதரப்பிலும் மற்றும் பன்முக அளவிலும் நமது ஒத்துழைப்புகளை பலப்படுத்துவதற்கு பாடுபடுவது என்று அதிபரும் நானும் ஒப்புக் கொண்டோம்.

நண்பர்களே,

ஐ.நா.வில் விரிவான சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் நாங்கள் விவாதித்தோம். அதிக அளவில் பிரதிநிதித்துவ பொறுப்புணர்வுள்ளதாக்கவும், செம்மையாக்குவதற்கும் பாதுகாப்புக் கவுன்சிலை விரிவுபடுத்துவதும் இதில் அடங்கும். பாதுகாப்புக் கவுன்சில் இருபத்தி ஒன்றாவது நூற்றாண்டின் உலகை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டுமே தவிர, முடிந்துவிட்ட நூற்றாண்டை பிரதிபலிப்பதாக இருக்கக் கூடாது என்பதன் அவசியத்தை நாங்கள் இருவரும் அங்கீகரித்தோம்.

மேன்மை தாங்கியவரே,

இந்தியாவுக்கு உங்களை மீண்டும் நான் வரவேற்கிறேன். மிகுந்த ஆக்கபூர்வமான விவாதங்களுக்காக உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா – துருக்கி பங்கேற்பு நிலையை ஓர் உயர்ந்த நிலைக்கு இன்றைய முடிவுகள் நிச்சயமாக அழைத்துச் செல்லும். இந்தியாவில் உங்கள் பயணம் பலன் தருவதாக இருக்க வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

மிக்க நன்றி.