பி.எம்.இந்தியா
இந்தியாவுக்கும் துர்க்மேனிஸ்தானுக்கும் இடையே 1997-ஆம் ஆண்டு கையெழுத்தான இரட்டை வரிவிதிப்பைத் தவிர்க்கவும், வருமானம், மூலதனம் மீதான நிதி வரி ஏய்ப்பைத் தடுக்கவும் ஆன இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத் திருத்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த உடன்பாடு, வங்கித் தகவல்கள், உள்நாட்டு வரி வட்டியில்லா பரிமாற்றத் தகவல்கள் உள்ளிட்ட வரி தொடர்பான தகவல் பரிமாற்றத்திற்கு உரிய சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரமான அம்சங்களுக்கு வழி வகுத்தது. இந்தியாவில் வசிப்பவர் தொடர்பான துர்க்மேனிஸ்தான் வழங்கும் தகவல்களை துர்க்மேனிஸ்தானின் உரிய அதிகார அமைப்புகளின் அனுமதியின் பேரில் இதர சட்ட அமலாக்க அமைப்புகளுடன் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள இது வகை செய்கிறது.
இந்த ஒப்பந்தம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் துஷ்பிரயோக எதிர்ப்புக்கென “நன்மைகளின் எல்லை வரம்பு” என்கிற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு இணைக்கப்படுவதால், வரி தவிர்ப்பு அல்லது ஏய்ப்பு சார்ந்த உள்நாட்டு சட்டங்கள் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது.