Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் (ஐநா பெண்கள்) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவுக்கும், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் (ஐநா பெண்கள்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு தொழில்நுட்ப உதவி வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது. இதன்படி, சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம், பாலின சமத்துவத்துக்கான சரிசமமான வாய்ப்புகளை உருவாக்க பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் போன்ற ஆளுமை அமைப்புகளுக்கு திறனை வலுப்படுத்த வழிவகை செய்யப்படுகிறது.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமும், ஐ.நா. பெண்கள் அமைப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பணியாற்றும். இதன்மூலம், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் பிரதிநிதிகள், தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், தங்களது திறனை வலுப்படுத்தவும் பெண்களின் பங்களிப்பு ஊக்கப்படுத்தப்படுகிறது.
கடந்தகால சிறப்பான செயல்பாடுகள் மூலம், இரு தரப்பும் ஆளுமை நடவடிக்கைகளில் பங்கேற்பை வடிவமைக்க இணைந்து பணியாற்றுவார்கள். மேலும், பாலின சமத்துவ ஆளுமையை ஊக்குவிக்கும் வகையில், சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்துவார்கள். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் திறன் வளர்ப்பு முயற்சிகள் உள்ளிட்டவை மூலம், பரஸ்பரம் பயனடைவதை ஊக்குவிக்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், தங்களது சிறந்த ஆளுமை, பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு நடவடிக்கைகளை பகிர்ந்துகொள்வர்.

இந்த நடவடிக்கைகள் மூலம், நீண்டகால அடிப்படையில், இந்தியாவில் உள்ள கிராமப்புற பெண்களின் தரம் உயர வழி ஏற்படும். மேலும், செயல்பாடுகள் மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான பீஜிங் உடன்படிக்கையின்படி, பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்கும் (CEDAW) இந்தியாவின் வாக்குறுதியை நிறைவேற்ற உதவும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமும், ஐ.நா. பெண்கள் அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் சிறப்பு நடவடிக்கைகளின் செயல்பாடுகள், குறிப்பிட்ட கால வரம்புக்குள் பலன் கிடைக்க வழி ஏற்படும். மேலும், இது ஐக்கிய நாடுகள் வளர்ச்சி உதவி செயல்பாடுகளின் (UNDAF), விரிவான ஒத்துழைப்பு வழிமுறைகளுக்குள் செயல்படுத்தப்படும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்யும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நடவடிக்கைகள், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் மாவட்டம் மற்றும் துணை-மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும்.