பி.எம்.இந்தியா
இந்தியா இங்கிலாந்து இடையே, இந்தியாவில் வணிகம் செய்வதை எளிமையாக்கும் நடவடிக்கைகள் சார்ந்து இந்த மாத முதல் வாரத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை பின்தேதியிட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இரு அரசுகளும் அரசாங்க அதிகாரிகளை பரிமாற்றிக்கொண்டு, சிறந்த நடைமுறைகள் பகிர முடியும். மேலும் தொழில்நுட்ப உதவிகளையும், புதிய முயற்சிகளை செயல்படுத்துவதிலும் பரஸ்பரம் உதவ முடியும். இந்த கூட்டு நடவடிக்கை மாநிலங்களையும் உள்ளடக்கியே நடைபெறுகிறது. இங்கிலாந்து அரசு கீழுள்ள துறைகளில் தனது நிபுணத்துவத்தை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள ஆர்வம் காட்டியுள்ளது.
a) சிறிய தொழில்கள் மற்றும் துவக்கநிலை தொழில்களுக்கு உதவுதல்
b) தொழில் துவக்கம் மற்றும் பதிவு
c) வரி செலுத்துதல் மற்றும் வரி நிர்வாகம்
d) நொடிப்பு நிலை
e) கட்டுமான அனுமதி
f) மின்சாரவசதி பெறுதல்
g) மதிப்பீடு மற்றும் கட்டுப்பாட்டு நிர்வாகத்திற்கான இடர்சார் கட்டுமானம்.
h) எல்லை தாண்டிய வணிகம்
i) போட்டி பொருளாதாரம்
j] கடன் வாங்குதல்
k) சட்டம் மற்றும் விதிமுறைகள் வகுத்தல்
I) கையிருப்பு குறைத்தல் மற்றும் ஒழுங்குமுறை ஓட்டம்.
m) ஒழுங்குமுறை சார்ந்த பாதிப்பு மதிப்பீடு
தற்போது இந்தியா 190 பொருளாதார நாடுகளில் 130வது இடத்தில் (வணிக ரிப்போர்ட், 2017ன் படி) உள்ளது. இங்கிலாந்து அரசு கடந்த சில ஆண்டுகளில் வணிகம் செய்வதை எளிமையாக்கும் (EoDB) வகையில் பல மேம்பாடுகளை அடைந்துள்ளது. மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்ளுதல், திறன் மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்த மேம்பாடு சாத்தியப்பட்டிருக்கிறது. பயிற்சிகள்/பயிலரங்கங்கள்/மாநாடுகளுக்கு வரும் தத்தமது அதிகாரிகளின் பயணம் மற்றும் தங்கும் செலவுகளை அந்தந்த நாடே ஏற்றுக்கொள்ளும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்வேறு இங்கிலாந்து அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு ஒழுங்குமுறை வடிவமைத்தல், முன்வரிசை ஆய்வாளர்களின் திறன் வளர்த்தல், சிறந்த நடவடிக்கைகளை பகிர்தல் ஆகியவற்றை ஊக்கப்படுத்துகிறது. புதிய நடைமுறைகளை இந்திய அரசும் , மாநில அரசுகளும், அவற்றின் பல்வேறு அமைப்புகளும் ஏற்று நடைமுறைப்படுத்தி, அதன்மூலம் ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்தி, இந்தியாவில் வணிகம் செய்ய ஏதுவான சூழலை உருவாக்க முடியும்.