Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட் இடையே சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் புதுமைப்படைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்


இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட் இடையே சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் புதுமைப்படைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு நன்மை அளிப்பதுடன் சமத்துவமான அனைத்தையும் உள்ளடக்கிய மேம்பாட்டுக்கு வழிவகுக்கும். வெளிநாடுகளில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் சிறப்பான நடைமுறைகள் குறித்து இந்திய சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினர் அறிந்து கொண்டு அவற்றை மேம்படுத்தவும் புதுமை படைக்கவும் வாய்ப்பளிக்கிறது. இந்த ஒப்பந்தம் இந்திய சிறு மற்றம் நடுத்தரத் தொழில்துறைக்கு ஐக்கிய அரபு எமிரேட்டின் இதே துறையுடன் பரஸ்பரம் பயனுள்ள தொடர்புகளை ஏற்படுத்த வாய்ப்பளித்து அந்த நாட்டு சந்தைகளை பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்கிறது.

*****