பி.எம்.இந்தியா
இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட் இடையே கடல்சார் போக்குவரத்தில் நிறுவன ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த்து.
முன்மொழியப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கடல்சார் போக்குவரத்து, சுங்கம் மற்றும் இதர நடைமுறைகளை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்தி வசதிகள் ஏற்படுத்த வழிவகை செய்யும். கழிவுப் பொருட்களை அகற்றுவதில் தற்போது உள்ள அமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வசதி ஏற்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும்.
இரு நாடுகளிலும் கப்பல் நிறுவனங்கள் நிலைத்து இருக்க கூடிய வர்த்தக செயல்பாடுகளுக்கான இருதரப்பு மற்றும் பல தரப்பு ஏற்பாடுகளை செய்துகொள்வதற்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி செய்கிறது.