Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா-கனடா நாடுகளில் உள்ள பட்டய கணக்காயர் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்தியா-கனடா நாடுகளில் உள்ள பட்டய கணக்காயர் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள இந்திய பட்டய கணக்காயர் நிறுவனம் மற்றும் கனடாவில் உள்ள பட்டய தொழில் கணக்காயர் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் செய்துக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விவரம்:

புதுதில்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2011 ஆம் ஆண்டு இந்தியா-கனடா இடையே இந்த விஷயத்தில் செய்துக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள இந்திய பட்டய கணக்காயர் நிறுவனம் மற்றும் கனடாவில் உள்ள பட்டய தொழில் கணக்காயர் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் குறிப்பிட்ட பிரிவில் இரு நிறுவனங்களின் பரஸ்பரம் உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள முடியும். பட்டய கணக்காயர் துறையின் விளக்கம், கற்றல், தொழில் திறன் மதிப்பீடு மற்றும் துவக்க நிலை பட்டய கணக்காயரின் திறமை ஆகிய பிரிவுகளிலும் ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்திக் கொள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.

தாக்கம்:

பரஸ்பரம் பயனுள்ள உறவுகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்திய பட்டய கணக்காயர் நிறுவன உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் அதன் பிற அமைப்புக்களின் நலனுக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொள்ளப்படுகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய பட்டய கணக்காயர் நிறுவன உறுப்பினர்கள் தங்களது தொழில் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள உதவுவதோடு உள்நாட்டில் தன்னை வலுப்படுத்தி அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய பட்டய கணக்காயர் நிறுவனம் கனடா மற்றும் தொழில் கணக்காயர் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே வலுவான செயல்பாட்டு உறவுகளை ஏற்படுத்தவும் உதவும்.

பயனாளிகள்:

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இளம் இந்திய பட்டய கணக்காயர்கள் கனடா தொழில் பட்டய கணக்காயர் நிறுவனத்தின் அங்கீகாரத்தை  பெறுவதோடு அங்குள்ள தொழில் வாய்ப்புக்களையும் பெற முடியும். கனடா நிறுவனங்களில் இந்திய பட்டய கணக்காயர்கள் பலர் மிக உயர்ந்த பொறுப்புக்களில் இருப்பதால் கனடா தொழில் பட்டய கணக்காயர் நிறுவனத்தின் அங்கீகாரம் கூடுதலாக கிடைக்கும் பட்சத்தில் இந்திய பட்டய கணக்காயர்களை கனடா நாட்டு நிறுவனங்கள் தங்களது கணக்காயர்களாக பணியமர்த்திக் கொள்வதோடு இந்திய கணக்காயர்களின் திறன் மீது நம்பிக்கை ஏற்படவும் வழிவகுக்கும்.

செயல்பாட்டு உத்தி மற்றும் இலக்குகள்:

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய பட்டய கணக்காயர் நிறுவனம் அல்லது கனடாவின் பிராந்திய கனடா தொழில் பட்டய கணக்காயர் அமைப்புக்களில் நீண்ட நாட்களாக உறுப்பினராக இருந்து உரிய கல்வி, தேர்வு மற்றும் செயல் விளக்க அனுபவ தகுதிகளை கொண்டிருக்கும் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்திய பட்டய கணக்காயர் நிறுவனம் அல்லது கனடாவின் பிராந்திய கனடா தொழில் பட்டய கணக்காயர் அமைப்புக்கள் மூன்றாம் தரப்பினரோடு மேற்கொண்ட மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம் உறுப்பினராகி இருந்தால் அவர்களுக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பொருந்தாது.

பின்புலம்:

இந்திய பட்டய கணக்காயர் நிறுவனம் இந்திய பாராளுமன்ற சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். இந்தியாவில் பட்டய கணக்காயர் தொழிலை நெறிமுறைப்படுத்துவதற்காக பட்டய கணக்காயர் சட்டம் 1949 கொண்டு வரப்பட்டது. கனடாவில் ஒருங்கிணைந்த பட்டய கணக்காயர் தொழிலுக்கு உதவுவதற்காக கனடா தொழில் பட்டய கணக்காயர் நிறுவனத்தை அந்த நாடு தேசிய அமைப்பாக உருவாக்கியது.