பி.எம்.இந்தியா
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் மாண்புமிகு திரு லாரன்ஸ் வோங்–ன் பயணத்தின் போது, இந்தியா மற்றும் சிங்கப்பூரிடையே விரிவான உத்திசார் கூட்டண்மைக்கான செயல்திட்டம் குறித்த கூட்டறிக்கை
இந்திய பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், சிங்கப்பூர் குடியரசின் பிரதமர் மேதகு திரு லாரன்ஸ் வோங், செப்டம்பர் 2-4 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார்.
செப்டம்பர் 4, 2025 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியும் சிங்கப்பூர் பிரதமர் திரு வோங் அவர்களும் பலதரப்பு விஷயங்கள் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து தலைவர்கள் முன்னிலையில் ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் திரு மோடி அளித்த மதிய விருந்தில் சிங்கப்பூர் பிரதமர் கலந்து கொண்டார். குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவையும் திரு வோங் சந்தித்துப் பேசினார். மேலும் ராஜ் காட்டில் மகாத்மா காந்திக்கு அவர் மலரஞ்சலி செலுத்தினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெயசங்கர், பிரதமர் திரு வோங்குடன் கலந்துரையாடினார்.
இந்தியா,சிங்கப்பூர் இடையேயான தூதரக உறவுகள் தொடங்கியதன் 60-வது ஆண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படுகிறது. நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைந்துள்ள இந்தியா மற்றும் சிங்கப்பூரின் நீண்ட கால நட்பின் பாரம்பரியத்தையும், பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள விரிவான ஒத்துழைப்பையும் இருநாட்டு பிரதமர்களும் பாராட்டினார்கள். 2024 செப்டம்பரில் பிரதமர் திரு மோடியின் அதிகாரப்பூர்வ சிங்கப்பூர் பயணம், 2025 ஜனவரியில் சிங்கப்பூர் குடியரசுத்தலைவர் திரு. தர்மன் சண்முகரத்னத்தின் அரசுமுறை இந்திய பயணம் மற்றும் ஆகஸ்ட் 2025-ல் புதுதில்லியில் நடைபெற்ற 3வது இந்திய–சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசைக் கூட்டம் போன்ற சமீபத்திய உயர்மட்ட செயல்பாடுகள் மூலம் இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர்கள் ஆய்வு செய்து தங்கள் திருப்தியை வெளிப்படுத்தினார்கள். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி, மக்களிடையேயான கலாச்சார ஒற்றுமை உள்ளிட்ட துறைகளில் முழுமையான ஒத்துழைப்பு எட்டப்பட்டுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பிரதமர் திரு மோடியின் அதிகாரப்பூர்வ சிங்கப்பூர் பயணத்தின் போது இரு தரப்பு உறவுகளை விரிவான உத்திசார் கூட்டாண்மையாக மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதை இரு நாடுகளின் பிரதமர்களும் நினைவு கூர்ந்தனர். இதன் அடிப்படையில், இருதரப்பு உறவுகளின் அடுத்த கட்டத்திற்கான தொலைநோக்குப் பார்வை மற்றும் திசையை அமைக்கவும், எட்டு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் உத்திசார் கூட்டண்மைக்கான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட முக்கிய செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஒத்துழைப்பை மேம்படுத்தும் எட்டு துறைகள் பின்வருமாறு: (i) பொருளாதார ஒத்துழைப்பு; (ii) திறன் மேம்பாடு; (iii) டிஜிட்டல்மயமாக்கல்; (iv) நிலைத்தன்மை; (v) இணைப்பு; (vi) சுகாதாரம் மற்றும் மருத்துவம்; (vii) மக்களிடையேயான கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் (viii) பாதுகாப்பு ஒத்துழைப்பு.
விரிவான உத்திசார் கூட்டாண்மைக்கான செயல்திட்டம்:
பொருளாதார ஒத்துழைப்பு: புதிய மற்றும் எதிர்காலத் துறைகளில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்
திறன் மேம்பாடு: திறன் மேம்பாடு மற்றும் திறன் கட்டமைப்பில் கூட்டு முயற்சி
****
(Release ID: 2163890)
AD/PKV/SG
A shining example of India-Singapore collaboration! https://t.co/xOnsBMGaWr
— Narendra Modi (@narendramodi) September 4, 2025