பி.எம்.இந்தியா
வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான அமைச்சர் திரு எஸ்.ஈஸ்வரன் அவர்களே. நண்பர்களே.
உங்களோடு இருப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. சிங்கப்பூர் இந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனது இந்த விஜயம், மிகுந்த பயனுள்ளதாகவும், நம்பிக்கை தரத்தக்கதாகவும் அமைந்துள்ளது. இன்று காலை, சிங்கப்பூர் தலைவர்களோடு சிறப்பானதொரு சந்திப்பை மேற்கொண்டேன். இந்த உறவை புதிய தளத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் சிங்கப்பூர் தலைவர்களோடு சிறப்பான சந்திப்புகள் நிகழ்ந்தன. இந்த உறவுக்கு புதிய இலக்குகளை நிர்ணயித்துள்ளோம்.
நண்பர்களே, நமது வரலாற்று ரீதியான உறவுகளும், கலாச்சார நெருக்கமுமே நமது சொத்துக்கள். ஏராளமான எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளியினர், சிங்கப்பூரின் சூழலையும், வாழ்வையும் வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக, பொருளாதார கூட்டுறவு, நமது உறவுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. உலகளாவிய அளவில், இந்தியாவின் 10வது தொழில் பங்குதாரராக சிங்கப்பூர் இருந்து வருகிறது. ஆசியானின் 2வது நாடாக சிங்கப்பூர் இருக்கிறது. 2005ம் ஆண்டின் ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்துக்கு பின்னால், இரு தரப்பு வர்த்தகம் பன்மடங்கு பெருகியுள்ளது. இந்தியாவின் அந்நிய முதலீட்டில் இரண்டாவது பெரிய நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது. இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லும் முதலீடுகளும் அதிகரித்துள்ளன. இந்திய முதலீட்டுக்கு சிங்கப்பூர் தற்போது சிறந்த இடமாக உருவாகியுள்ளது.
பல்வேறு இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரில் பதிவு செய்துள்ளன. கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்ட வியாபார நெருக்கத்தினால், சிங்கப்பூர் நிறுவனங்களும், இந்தியாவோடு பரிச்சயமாகி இருக்கின்றன. நமது நிறுவனங்கள், பல்வேறு கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளன. வளர்ந்து வரும் பெரும் எண்ணிக்கையிலான நமது நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும், ஒரு பெரும் கூட்டுறவை ஏற்படுத்த உள்ளன.
நேரம் தவறாமை உங்களுக்கு பழக்கம், இந்தியாவில் விரிவாக்கத்துக்கான வாய்ப்பு இருக்கிறது.
செங்குத்தாக செல்வது உங்களுக்கு பிடிக்கும், இந்தியாவின் வளர்ச்சி, செங்குத்தாகவும் இருக்கிறது, கிடைமட்டமாகவும் இருக்கிறது.
நீங்கள் சிறப்பான காப்பகம், இந்தியா பெரிய ஆய்வகம்
இந்தியாவும் சிங்கப்பூரும் பல துறைகளில் இணைந்து பணியாற்ற முடியும்.
சிங்கப்பூரின் பங்கேற்போடு கடந்த மாதம் நான் இரு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினேன். ஒன்று ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதி. இந்த நகரத்துக்கான மாஸ்டர் ப்ளானை தயாரிக்கும் பணியை சிங்கப்பூர் செய்து வருகிறது. இரண்டாவது, JNPT மும்பையில் உள்ள நான்காவது கன்டெய்னர் கிடங்குக்கு நாட்டப்பட்ட அடிக்கல். இது சிங்கப்பூரின் PSA நிறுவனத்தின் கூட்டணியோடு கட்டப்படுகிறது. சாங்கி விமான நிலையத்தின் மூலமாக இரண்டு இந்திய விமான நிலையங்களை நடத்துவதற்கு ஆலோசித்து வருகிறோம். இவையெல்லாம் பெருகி வரும் நமது கூட்டுறவின் சில உதாரணங்கள்.
இந்தியாவின் உலகம் சார்ந்த பார்வையில், சிங்கப்பூர் ஒரு மதிப்பு வாய்ந்த நட்புசக்தியாக இருந்து வருகிறது. எங்களின் கிழக்கு நோக்கிய திசை கொள்கையை அமல்படுத்த, சிங்கப்பூரை ஒரு முக்கியமான கூட்டணி நாடாக பார்க்கிறோம். இந்த கொள்கையை செயல்படுத்துவதில், சிங்கப்பூர் வகித்த முக்கிய பங்கை நான் அறிவேன். சிங்கப்பூரோடு இணைந்து இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.
இருதரப்பு உறவுகள் அல்லாமல், மூன்றாம் உலக நாடுகளோடு இணைந்து பணியாற்றவும் வாய்ப்புகள் உள்ளது. ஆசியான் பொருளாதார கூட்டணி ஒரு உதாரணம். இந்தக் கூட்டணி 600 மில்லியன் மக்களைக் கொண்ட 2 ட்ரில்லியன் டாலர் சந்தையை உருவாக்கும். இது நமது தொழில்களை தென்கிழக்காசிய பகுதியில் இணைந்து பல்வேறு வாய்ப்புகளை கண்டறிய வகை செய்யும்.
ஆசியான் மற்றும் அதன் ஆறு கூட்டணி நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணி தொழில் நிறுவனங்களுக்கு மற்றொரு வாய்ப்பு. சமீபத்தில் டெல்லியில் நடந்த இந்திய ஆப்பிரிக்க மாநாட்டில் சிங்கப்பூர் சிறப்பு அழைப்பாளராக இருந்தது. இது சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிடையே ஏற்பட்டு வரும் கூட்டணிக்கான மற்றொரு அங்கீகாரம். நாம் ஆப்பிரிக்கா நாடுகளில் இணைந்து பணியாற்ற முடியும்.
நண்பர்களே,
இது வரை வரலாற்றில் இல்லாத வகையில் இந்தியா பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு எங்கள் வளர்ச்சி விகிதம் 7.3. இந்த ஆண்டு இன்னும் அதிகமான வளர்ச்சி இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. பெரிய நாடுகளின் வரிசையில், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருந்து வருகிறது. இந்த வளர்ச்சியின் பயன்கள், சாதாரண மனிதனை அடைய வேண்டும் என்பதற்காக பாடுபடுகிறோம்.
இதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம். எங்களின் திட்டங்கள் :
• பொருளாதாரத்தை வலிவுள்ளதாக்குதல்
• மக்களுக்கு அதிகாரம்
• நிதியில்லாதவர்களுக்கு நிதி
• ஏழை மக்களுக்கு ஆதரவு
• அனைத்து தரப்பினரின் வருவாயை அதிகரித்தல்
பணத்தின் பயன் விளிம்புநிலை மக்களை அடைய வேண்டும். இதை மனதில் வைத்துதான் 190 மில்லியன் வங்கிக் கணக்குகளை தொடங்கியுள்ளோம். மக்களுக்கான மான்யங்கள் ஏழை மக்களை நேரடியாக சொன்றடையும் வகையில் பணியாற்றி வருகிறோம். இது அரசு செலவினத்தில் ஒரு ஒழுங்கையும் ஏற்படுத்துகிறது. புதிய ஓய்வூதிய திட்டங்களையும், காப்பீட்டுத் திட்டங்களையும் உருவாக்கியுள்ளோம். சிறு தொழில் முனைவோர்களுக்காகவும், சிறு வணிகர்களுக்காகவும் முத்ரா என்ற வங்கியை தொடங்கி நிதி உதவி செய்து வருகிறோம். குறிப்பிட்ட காலத்துக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி, மின்வசதி, கழிப்பிட வசதி ஆகியவற்றை செய்து தர உள்ளோம். அடுத்த பொருளாதார புரட்சிக்கான வாயிலாக இந்தியா உருவாகியுள்ளது. மாறி வரும் இந்தியா, உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரும் வாய்ப்பை உருவாக்கி உள்ளது.
50 மில்லியன் புதிய வீடுகள், 100 நவீன நகரங்கள், ரயில்வே இணைப்புகளை நவீனப்படுத்துதல், ரயில்வே நிலையங்களை மேம்படுத்துதல், புதிய ரயில்வே காரிடார்களை அமைத்தல், 175 கிகாவாட் மறுசுழற்சி எரிசக்தியை உற்பத்தி செய்தல், அந்த மின்சக்தியை பகிர்மாணம் செய்தல், போன்ற பணிகள் உள்ளன. இவை தவிர தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுவது, பாலங்கள் கட்டுவது, மெட்ரோ ரயில் கட்டவது போன்ற பணிகளும் உள்ளன.
இப்படி ஒரு உட்கட்டமைப்பை ஏற்படுத்தும் ஒரு வாய்ப்பும், பொருட்கள் உற்பத்தி செய்யும் வாய்ப்பும் வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது. முக்கியமாக, இத்தனை அதிக எண்ணிக்கையிலான நுகர்வோர் வேறு எந்த நாட்டிலும் கிடையாது.
எங்கள் கொள்கைகள் மூலமாகவும், எங்கள் மக்களின் மூலமாகவும், இந்த வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வளர்த்தெடுக்க முயற்சித்து வருகிறோம். டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா போன்ற திட்டங்கள் மக்களை இத்திட்டங்களில் பங்கெடுப்பதற்காகவே. சமீப காலத்தில் பல்வேறு புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதை காண்கிறோம். இவற்றில் சில நிறுவனங்கள், ஏற்கனவே உள்ள பெரிய நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் வளர்ந்துள்ளன. இந்த முயற்சிகளை முழுமையாக பயன்படுத்தும் வகையில் தொடங்கிடு இந்தியா, நிமிர்ந்திடு இந்தியா என்ற திட்டத்தையும் உருவாக்கி உள்ளோம்.
நண்பர்களே,
கடந்த சில மாதங்களாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இந்தியா மீதான ஆர்வம், அதிகரித்துள்ளது. ஆனால் பல்வேறு ஒழுங்குமுறை விதிகளும், வரிவிதிப்பு விவகாரங்களும் அவர்களுக்கு தயக்கம் ஏற்படுத்தி வருகின்றன. இந்த தயக்கத்தை போக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை சமீப காலத்தில் எடுத்துள்ளோம்.
சில உதாரணங்கள்
• பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் அனுமதி உள்ளிட்ட பல்வேறு ஒழுங்குமுறை அனுமதிகளை விரைவுபடுத்தியுள்ளோம்.
• லைசென்ஸ் வழங்கும் முறையை தளர்த்தியுள்ளோம்.
• பாதுகாப்பு தொடர்பான லைசென்ஸ்களின் காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 18 ஆண்டுகளாக அதிகரித்துள்ளோம்.
• 60 சதவிகிதத்துக்கும் அதிகமான பாதுகாப்பு தொடர்பான பொருட்களை லைசென்ஸ் பெறும் முறையிலிருந்து தளர்த்தியுள்ளதோடு ஏற்றுமதியில் பயன்பாட்டாளர் சான்று வழங்குவதையும் தளர்த்தியுள்ளோம்.
• முன்கூட்டிய வரிவிதிப்பு நிச்சயம் இருக்காது என்று உறுதியளித்துள்ளோம்.
• இந்த நிலைப்பாட்டை பல்வறு செயல்பாடுகளால் நிரூபித்துள்ளோம்.
• FPI மற்றும் இதர வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கலப்பு உச்சவரம்பை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
• மாற்று முதலீட்டு நிதிகளுக்கான விதிமுறைகளை அறிவித்துள்ளோம்.
• ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு லாப வரிவிதிப்பு தொடர்பான விதிமுறைகளை சீர்திருத்தியுள்ளோம்.
• நிரந்தர ஸ்தாபன முறைகளை மாற்றியுள்ளோம்.
• பொது வரி தவிர்க்கும் விதிகளை அடுத்த இரண்டாண்டுகளுக்கு தள்ளி வைத்துள்ளோம்.
• பொது சேவை வரிக்கான மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். 2016ம் ஆண்டில் அது நடைமுறைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
• திவாலாவது தொடர்பான புதிய விதிகளும், அறிவுசார் காப்புரிமை கொள்கையும் தயாராகி வருகிறது. கம்பெனி சட்டங்களுக்கான தீர்ப்பாயம் விரைவில் உருவாக உள்ளது.
• நிலக்கரி, அலைக்கற்றை, இரும்புத் தாது போன்ற இயற்கை வளங்களை வெளிப்படையான ஏலத்தின் மூலம் பகிர்ந்தளிக்கும் முறை தற்போது நிலைபெற்றுள்ளது.
இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே. வரி விதிக்கும் முறையை வெளிப்படையானதாகவும், எதிர்பார்க்கக் கூடியதாகவும் மாற்றி வருகிறோம். வரி விதிப்பு தொடர்பான சிக்கல்களில் முதலீட்டாளர்களுக்கு விரைவாகவும் நியாயமாகவும் முடிவுகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதற்காக ஏற்கனவே பல்வேறு திருத்தங்களை செய்துள்ளோம்.
எங்கள் நடவடிக்கைகளின் பலனாக
• வெளிநாட்டு முதலீட்டுகள் தொடர்பான எண்ணங்கள் முடிவுகளாக மாறி வருகின்றன.
• கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், அந்நிய நேரடி முதலீடு 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
• நம்பிக்கையான எண்ணங்கள் நல்ல முடிவுகளாக மாறுகின்றன.
• தொழில் தொடங்க ஏதுவான நாடுகளுக்கான உலக வங்கியின் பட்டியலில் 12 இடங்கள் முன்னேறியுள்ளோம்.
• உலகின் மதிப்பு வாய்ந்த ஒரு பிராண்டாக இந்தியா 7வது இடத்தில் உள்ளது. அதன் பிராண்ட் மதிப்பு 32 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
• முதலீடு செய்ய ஏற்ற இடம் என்று உலகின் பல்வேறு நிறுவனங்களாலும் அமைப்புகளாலும் இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.
• முதலீடுகளுக்கான சிறந்த நாடுகளின் UNCTAD பட்டியலில் 15வது இடத்தில் இருந்த இந்தியா, 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
• உலக பொருளாதார மையத்தின் வரிசைப்படுத்தலில் இந்தியா 16 இடங்கள் முன்னேறியுள்ளது.
மூடி நிறுவனம் இந்தியாவை நம்பிக்கைக்குரிய நாடு என்று கூறியுள்ளது.
வெறும் 18 மாதங்களில் உலக முதலீட்டாளர்கள் பார்வையில் இந்தியாவின் நம்பகத்தன்மையை உயர்த்தியுள்ளோம். எனது அரசு பதவியேற்றதுமே, அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டோம். ரயில்வேயில் 100 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளோம். காப்பீடு மற்றும் பாதுகாப்புத் துறையில் 49 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளோம். இது தொடர்பான கொள்கை முடிவுகளில் இறுதி நேரத்தில் வரும் சிக்கல்களை அறிந்தே உள்ளோம். இதற்காக நடைமுறைகளையும் எளிமையாக்கி வருகிறோம். இந்த மாதத் தொடக்கத்தில் அந்நிய முதலீட்டுக்கு மேலும் வழிவகுக்கும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளோம்.
கடைசியாக செய்த சீர்திருத்தங்களால்
• அந்நிய முதலீட்டுக்கான சிறந்த பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது.
• அந்நிய முதலீட்டுக்கு சில புதிய துறைகள் முழுவதுமாக அனுமதிக்கப்பட்டுள்ளன.
• பல துறைகளில் அந்நிய முதலீட்டுக்கான அனுமதிகள் தானியங்கி முறையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
• க்ரீன்பீல்டு இடங்களோடு சேர்த்து, ப்ரவுன்பீல்டு திட்டங்களிலும் அந்நிய முதலீடு எளிதாக வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சாலைகள், கட்டுமானம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.
• அந்நிய முதலீட்டின் நுழைவு மற்றும் வெளியேறுவதற்கான நிபந்தனைகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளன.
நண்பர்களே,
டிஜிட்டல் இணைப்பு மற்றும் சுத்தமான எரிசக்தி உள்ளிட்ட அடுத்த தலைமுறை உட்கட்டமைப்புகளில் முதலீடுகளை அதிகரிக்க உள்ளோம். அடிப்படை உட்கட்டமைப்பு அல்லாமல், சமூக, தொழில்துறை சார்ந்த, விவசாய உட்கட்டமைப்புகளையும் மேம்படுத்தி மக்களுக்கு சிறந்த வாழ்க்கை தரத்தையும், கூடுதல் வருவாயையும் ஏற்படுத்த உள்ளோம்.
செலவினத்தை பெருமளவில் கட்டுப்படுத்தியதன் மூலம், பொதுத்துறையில் முதலீடுகளை அதிகரித்துள்ளோம். இதை முழுமையாக பயன்படுத்த தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். வரியில்லா உட்கட்டமைப்பு பத்திரங்களை உருவாக்கி, பத்திரத்துக்கான சந்தையை விரிவாக்க உள்ளோம். இது நீண்டகால உட்கட்டமைப்பு முதலீட்டுக்கு உதவும். உட்கட்டமைப்புக்காக, மற்ற நாடுகளில் ரூபாய் பத்திரங்களையும் விநியோகிக்க உள்ளோம். சிங்கப்பூர் அந்த நாடுகளில் ஒன்று. இந்த விவகாரத்தில் சிங்கப்பூரோடு இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளோம்.
நண்பர்களே,
இந்திய மக்களில் 800 மில்லியனுக்கும் அதிகமானனோர் 35 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களின் ஆர்வம், திறன், சக்தி, ஆகியவை, இந்தியாவின் பொருளாதார மாற்றத்திற்கான உந்துசக்தியாக இருக்கும். அவர்களை சரியான வகையில் வேலையில் ஈடுபடுத்துவதுதான் தற்போதைய சவால். பல ஆண்டுகளாக ஜி.டி.பி.யில் 16 சதவிகிதமாக தேங்கியுள்ள உற்பத்தியை அதிகப்படுத்துவதுதான் இதற்கான வழி. குறுகிய காலத்துக்குள் இது 25 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும். இதை மனதில் வைத்தே மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளாம். உலகத்தின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஒரு நவீன பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும், உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி மையமாக உருவாவதற்கும், உலகத் திறன்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.
இந்த நோக்கங்களை அடைவதற்கு, தொழில் தொடங்க ஏதுவான இடமாக இந்தியாவை மாற்றி வருவதோடு, தொழில் துறைக்கும் உட்கட்டமைப்புக்குமான அனுமதி வழங்குதலை விரைவுபடுத்தியுள்ளோம். கொள்கை அடிப்படையிலான, அனைவரும் பங்கு பெறக்கூடிய சிறந்த நிர்வாகமே எங்களின் தாரக மந்திரம்.
தனியார் மற்றும் பொதுத்துறை ஆகியவை இணைந்து, வெறும் அரசு மட்டும் முதலீடு செய்து வந்த பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய வைத்துள்ளோம். பொதுத்துறைகளில் உள்ள எங்கள் பங்குகளையும் சந்தையில் ஒழுங்கை ஏற்படுத்தவதற்காக விற்பனை செய்து வருகிறோம். உலகப் பொருளாதாரத்தோடு இந்தியப் பொருளாதாரத்தை இணைக்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். அடுத்த மூன்று மாதங்களை இந்தியாவில் முதலீட்டையும், தொழிலையும் பாதிக்கும் சிறு சிறு விஷயங்களையும் களைவதற்காக பயன்படுத்த உத்தேசித்துள்ளேன்.
நண்பர்களே,
நாங்கள் செய்வது அனைத்தையும் இரண்டு அடிப்படையான கொள்கைகள் நடத்துகின்றன. ஒன்று எங்கள் மக்கள் இந்நடவடிக்கைகளின் மையமாக இருக்க வேண்டும். அவர்களுக்காகத்தான் இந்த முதலீடுகள். எங்களின் விரைவான வளர்ச்சி, உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கின் வாழ்வை மாற்றும்.
இரண்டாவது, காலநிலை, நமது கோளம் மற்றும் இயற்கை. காலநிலை மாற்றத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்களை களைவதற்கான எண்ணம் பொருளாதாரம் மற்றும் அரசியலால் ஏற்பட்டதல்ல. விறுப்பு வெறுப்பினாலோ, அச்சத்தினாலோ ஏற்பட்டதும் அல்ல. அவை இயற்கையே நமது அன்னை என்ற எங்களின் அடிப்படை நம்பிக்கையினால் ஏற்பட்டது. இயற்கை நமக்கு ஏராளமாக வழங்கி நம்மை வாழ வைக்கிறது. ஆகையால் நாம் அதை பாதுகாக்க வேண்டும். அது நம்பிக்கை அடிப்படையிலானது. தேவைக்கும் அதிகமாகவே நாங்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என்பதை உலகச் சமுதாயத்துக்கு உறுதி கூறுகிறேன். எங்களால் சாதாரணமாக முடிந்ததை விட அதிகமாகவே செய்வோம்.
இந்த இரு அர்ப்பணிப்புகளும் வேறு எந்த நாட்டாலும் ஈடு செய்ய முடியாத பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இவை முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.
இறுதியாக, நான் கூற விரும்புவது, கடந்த 18 மாதங்களாக
• சீர்திருத்தங்கள் பெருமளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை தற்போது கடைசி கட்டத்தை எட்டி வருகின்றன.
• சீர்திருத்தங்கள், தற்போதுள்ள அமைப்புகள் சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்பதற்காவே
• எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், மக்கள் தங்கள் திறமைகளை உணர்ந்து கனவுகளை அடைய வேண்டும் என்பற்காவே
• இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், மக்களின் முகத்தில் புன்னகையை வரவைத்து, அலுவலக நடைமுறைகளை குறைக்கவே
• கூடுதலாக நிதிச் சந்தைகளுக்கு புதிய அடிப்படைகளும், புதிய முகப்புகளும் திறக்கப்பட்டுள்ளன.
• மொத்தமாக பொருளாதாரம் முன்னேறுவதற்கான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஐ.எம்.எப்.பின் தலைவர், உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு பிரகாசமான ஒளி என்றார். அந்த ஒளி தானாக உங்களை அடையும் வரையில் நான் காத்திருக்க விரும்பவில்லை.
இதற்காகத்தான் நான் இங்கே வந்துள்ளேன்.
இந்தியாவுக்கு உங்களை பெரிய அளவில் வரவேற்பதற்கவே நான் வந்துள்ளேன்.
அங்கே உங்கள் கரங்களை பத்திரமாக பற்றிக் கொள்ள நான் காத்திருக்கிறேன் என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
நன்றி
Happy to address the India-Singapore Economic Convention. This visit has been productive & positive: PM https://t.co/ikpbo75nSI
— PMO India (@PMOIndia) November 24, 2015
Historical ties and cultural proximity are out assets: PM @narendramodi on India-Singapore ties https://t.co/ikpbo75nSI
— PMO India (@PMOIndia) November 24, 2015
Singapore is one of the top destinations for Indian investment. Many Indian companies are registered here: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 24, 2015
Singapore and India can work together in several positive areas: PM @narendramodi https://t.co/ikpbo75nSI
— PMO India (@PMOIndia) November 24, 2015
Singapore is involved in the master plan of Amaravati, Andhra Pradesh: PM @narendramodi https://t.co/ikpbo75nSI @ncbn @AndhraPradeshCM
— PMO India (@PMOIndia) November 24, 2015
Money has to reach the marginalised. We opened 190 million bank accounts & aim for direct transfer of benefits to the poor: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 24, 2015
We are trying to harness India's development potential through policies and our people: PM @narendramodi https://t.co/ikpbo75nSI
— PMO India (@PMOIndia) November 24, 2015
Many people of India are under 35. Their energy, enterprise & skill will guide India's transformation: PM https://t.co/ikpbo75nSI
— PMO India (@PMOIndia) November 24, 2015
Reforms are happening in a big way & these reforms are to transform systems: PM @narendramodi https://t.co/ikpbo75nSI
— PMO India (@PMOIndia) November 24, 2015
I am here to invite you to India in a bigger way: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 24, 2015
At India-Singapore Economic Convention, explained why India is the next frontier of economic revolution. https://t.co/VJIPRvtdW5
— Narendra Modi (@narendramodi) November 24, 2015
Interacted with investors in Singapore. Explained why India is the best place to be in & invest. pic.twitter.com/yBQ8XGtTff
— NarendraModi(@narendramodi) November 24, 2015