பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாரம்பரிய மருத்துவ முறையில், இந்தியாவுக்கும், செயின்ட் வின்சென்ட் & தி கிரேனேடியன்ஸுக்கும் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. புதுதில்லியில் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.