Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா-நியூசிலாந்து நாடுகளின் கூட்டறிக்கை

இந்தியா-நியூசிலாந்து நாடுகளின் கூட்டறிக்கை


நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்சனின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2026 ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.

40 ஆண்டுகளில், இந்தியப் பிரதமர் நியூசிலாந்து நாட்டில் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அவரது இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்பு, ஒத்துழைப்பில், வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகவும், புதிய பாதையை வகுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ‘கவர்ன்மென்ட் ஹவுஸ்’ வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர், அந்நாட்டுப் பிரதமர் திரு லக்சனுடன், இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள்,  அந்நாட்டில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார். இதனையடுத்து, அந்நாட்டின்  விளையாட்டுத் துறை சார்ந்த புதுமையான முயற்சிகளையும் அவர் பார்வையிட்டார்.

மார்ச் 2025-ல் பிரதமர் திரு லக்சன் இந்தியாவில் மேற்கொண்ட பயணத்தை அப்போது இரு நாட்டுப் பிரதமர்களும் நினைவு கூர்ந்தனர். அந்தப் பயணத்தின் போது, இந்தியா – நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு, கல்வி, சுங்கம், தோட்டக்கலை, வனவியல், விளையாட்டு ஆகிய முக்கியத் துறைகளில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இந்தியா – நியூசிலாந்து நாடுகளுக்கு இடையேயான  நீண்டகால நட்பு, பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், இரு நாடு மக்களுக்கு இடையேயான வலுவான பிணைப்புகள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், பொதுவான நலன்கள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில், இருதரப்பு உறவை ‘உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்த அவர்கள் முடிவு செய்தனர். அதற்கேற்ப, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கூட்டு நடவடிக்கைகளை வழிநடத்தும் ஒரு கட்டமைப்பாக, இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பு, 2030-க்கான செயல்திட்டத்தை, இரு தலைவர்களும் அங்கீகரித்தனர்.

இருதரப்பு உறவுகளை புதிய நிலைக்குக் கொண்டு செல்வது, தற்போதுள்ள ஒத்துழைப்பு வழிமுறைகளை வலுப்படுத்துவது, இருதரப்பு, பலதரப்பு ரீதியாக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வழி வகைகளை ஆராய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட, உத்திசார் ஒத்துழைப்பிற்கானத் தொலைநோக்குப் பார்வை, குறிக்கோளுடன் கூடிய நீண்டகாலத் திட்டத்திற்கு இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர்.

உயர்நிலை அரசியல் ரீதியிலான தொடர்புகள் அதிகரித்து வருவதை இரு தலைவர்களும் வரவேற்றனர். மேலும், பிராந்திய, பலதரப்பு நிகழ்வுகளின் போது, இரு நாட்டுப் பிரதமர்கள், அமைச்சர்களுக்கு இடையே வழக்கமான பரஸ்பர பயணங்கள், பேச்சுவார்த்தைகளை நடத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

உத்திசார் ஒத்துழைப்பிற்கான வழிகாட்டுதலை வழங்கவும், 2030-க்கான செயல்திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும், வழக்கமான வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான பேச்சு வார்த்தையை தொடரவும், இருநாட்டு வெளியுறவு அமைச்சகம் இடையேயான வருடாந்திர மூத்த அதிகாரிகள் சந்திப்பு நடைமுறையை வலுப்படுத்தவும் இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283527&reg=3&lang=1  

****

TV/SV/RJ