பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையே மின்னணு நிர்வாகத் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மின்னணு நிர்வாகம், தகவல் தொழில்நுட்பக் கல்வி, பல்வேறு துறைகளில் மின்னணு நிர்வாக அமலாக்கம், தரவு மையங்கள் அமைப்பது ஆகியவற்றை ஊக்குவிக்கும்.