Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே சிவில் மற்றும் வர்த்தக விவகாரங்களில் சட்டம் மற்றும் நீதித்துறை சார்ந்த ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம்


இந்தியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே சிவில் மற்றும் வர்த்தக விவகாரங்களில் சட்டம் மற்றும் நீதித்துறை சார்ந்த ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

1. நீதித்துறையைச் சார்ந்த உத்தரவுகளையும் அழைப்புகளையும் வழங்குதல்.

2. சட்டம் மற்றும் நீதித்துறை ஆவணங்களை பரிசீலித்தல்.

3. வேண்டுகோளின்படி சான்றுகளை அளித்தல்.

4. தீர்ப்புகள் மற்றும் நடுவர்மன்ற தீர்ப்புகள் ஆகியவற்றை செயல்படுத்துதல்.

5. சிவில் மற்றும் வர்த்தக விவகாரங்களில் தேவையான சட்ட உதவிகளை இருநாடுகளும் வேண்டுகோளுக்கு இணங்க அளிக்க ஒப்புக் கொள்ளுதல்.

6. எவ்வித காரணமும் இன்றி வேண்டுகோள் அடிப்படையில் அழைப்பாணைகள் நிராகரிக்கப்படக் கூடாது. பாதுகாப்பு மற்றும் பொதுவான கொள்கை குறித்த அடிப்படையில் குறிப்பிட்ட நாடு வேண்டுகோளை அளித்தால் நிராகரிக்கப்படலாம்.

7. அந்தந்த நாட்டின் குடிமக்கள் ஆதாரங்களை அந்தந்த நாட்டின் தூதரக அதிகாரிகள் தான் வழங்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது. அதனால் அந்தந்த நாட்டின் நீதிமன்றங்களில் நீதிமன்ற விசாரணைகள் விரைவாக முடிவுக்கு கொண்டுவரப்படும்.

8. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் 30வது நாளிலிருந்து அமலுக்கு வரும். இந்த ஒப்பந்தம் ஆறு மாத கால அறிவிப்புப் பின்னர் அல்லது நாடுகள் விரும்பும் வரை நடைமுறையில் இருக்கும்; மற்றும்

9. 1908 ஆம் ஆண்டு சிவில் நடைமுறை சட்டம் மற்றும் 1996 ஆம் ஆண்டு நடுவர் நீதிமன்ற சட்டம் போன்றவற்றிற்கு உட்பட்டு இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாட்டு குடிமக்களும் பயன்பெறுவர். சட்டம் மற்றும் நீதித்துறை பிரிவின் கூட்டுறவும், நட்புறவும் இரு நாடுகளிடையே வலுப்படும்.

பின்னணி:

சிவில் மற்றும் வர்த்தக விவகாரங்களில் அந்நிய நாடுகளுடன் ஒருங்கிணைந்த வகையில் சட்ட உதவி ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

2013ஆம் ஆண்டு முதல் இந்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் இருந்தது. 2010ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை இந்திய பிரதிநிதிக் குழு ஓமன் மற்றும் மஸ்கட் ஆகிய இடங்களுக்கு பயணத்தை மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

1996 இந்திய சிவில் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படும். இதற்காக திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியல் இல்லை.