பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியா மற்றும் பஹ்ரைன் இடையே, சர்வதேச தீவிரவாதம், தேசம் தாண்டிய குற்றம், போதைப் பொருள் கடத்தல், இதர ரசாயனப் பொருட்கள் கடத்தல் தொடர்பான ஒத்துழைப்பு குறித்து ஏற்பட்ட ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தான ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்ளும் நாள் முதல் அமலுக்கு வரும்.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே, தீவிரவாதம், இதர குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களை தடுப்பது, குற்றப் புலனாய்வு, வழக்கு தொடருவது போன்ற நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க உதவும். இரு நாடுகளின் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட இது உதவும்.