Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான, இந்தியா மற்றும் வங்காளதேசம் எல்லையில் எல்லைச் சந்தைகள் ஏற்படுத்துவதற்கான திருத்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் செயல்பாட்டு விதத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் வங்களாதேசம் இடையேயான, இந்தியா மற்றும் வங்களாதேசம் எல்லையில் எல்லைச் சந்தைகள் ஏற்படுத்துவதற்கான திருத்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் செயல்பாட்டு விதத்திற்கு தனது ஒப்புதலை அளித்தது.

எல்லைச்சந்தைகளின் நோக்கம், உள்ளூர் சந்தைகளில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்யும் பராம்பரிய அமைப்பை ஊக்கப்படுத்தும் வகையில், இரு நாட்டு எல்லைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் நல்வாழ்வு ஆகும். இத்தகைய நடவடிக்கைகள் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட பிரிவினரின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.

தற்போது நான்கு எல்லைச் சந்தைகள் இயங்கி வருகின்றன, 2010, அக்டோபர், 23 அன்று வங்காளதேசம் மற்றும் இந்தியா இடையே எல்லைச்சந்தைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் செயல்படும் விதம் கையொப்பமிடப்பட்டதன் அடிப்படையில், மேகாலாய மற்றும் திரிபுராவில் தலா இரண்டு எல்லைச் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து, 2012, மே, 15 அன்று எல்லைச்சந்தைகள் செயல்படும் விதத்திற்கான பிற்சேர்க்கையும் கையொப்பமிடப்பட்டன. இந்த திருத்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் செயல்படும் விதம், கூடுதல் எல்லைச் சந்தைகளை ஏற்படுத்துதல் மற்றும் செயல்படுத்துவதற்கான சட்ட வரைமுறைகளை அளிக்கும்.