பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் ஸ்லோவேனியா இடையே இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பதற்கும், வரி ஏய்ப்பை தடுப்பதற்கும் உள்ள ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
இந்த திருத்தம், வரி ஏய்ப்பு மற்றும் வரி தவிர்ப்பை தடுப்பதற்கான தகவல் பரிமாற்றத்தை விரிவாக்கி, வரி வசூல் செய்வதில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பதற்கான வழிவகைகளை செய்கிறது.