Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா முழுவதிலும் மகப்பேறு நன்மைத் திட்டச் செயல்பாட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, 01.01.2017 முதல் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் மகப்பேறு நன்மைத் திட்டத்திற்கான தனது பின்னேற்பு ஒப்புதலை வழங்கியது. 31.12.2016 அன்று பிரதமர் நாட்டு மக்களுக்கான உரையின்போது, மகப்பேறு நன்மைத் திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

 

மகப்பேறு நன்மைத் திட்டத்தின் கீழ், ஊதிய இழப்பீட்டை ஈடுசெய்யும் வகையில் கருவுற்ற பெண்களுக்கு ரொக்க ஊக்கத் தொகை அளிக்கப்படும். இதனால் பெண்கள் பிரவசத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் போதிய அளவு ஓய்வு எடுக்க இயலுவதோடு, முறையான ஊட்டச்சத்து கிடைக்காமல் மறுக்கப்படுவதையும் தடுக்கிறது.

 

01.01.2017 முதல் 31.03.2020 வரையிலான காலத்திற்கான இத்திட்டத்தின் தொகை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்குத் தொகையுடன் சேர்த்து ரூ.12,661 கோடி ஆகும்.  01.01.2017 முதல் 31.03.2020 வரையிலான காலத்திற்கான மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.7,932 கோடி ஆகும்.

 

திட்டத்தின் நோக்கம்

1)   உயிருள்ள முதல் குழந்தையின் பிரசவத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் பெண்கள் போதிய அளவு ஓய்வு எடுப்பதற்கு எதுவாக ஊதிய இழப்பீட்டில் பகுதியை ஈடு செய்யும் வண்ணம் ரொக்க ஊக்கத் தொகையை இழப்பீட்டுத் தொகையாக அளித்தல்.

 

2)   இந்த ரொக்க ஊக்கத்தொகையானது, கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் (பி.டபிள்யு.&எல்.எம்.)  உடல்நலன் முன்னேற்றமடைய வைக்க உதவுவதுடன், ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவுகளான ஊட்டச்சத்து குறைப்பு, வீண்செய்தல் மற்றும் பிற தொடர்புயை பிரச்சினைகளை குறைக்கும்.

 

இலக்கு குழு

 

தற்சமயம், மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்களில் நிரந்தரமாக பணியாற்றும் கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் (பி.டபிள்யு.&எல்.எம்.) அல்லது பிற சட்டத்தின் மூலம் இதே மாதிரியான பயன்களை பெறுவோரை தவிர்த்து, அனைத்து கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள். உயிருள்ள முதல் குழந்தையின் கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு (பி.டபிள்யு.&எல்.எம்.)  மூன்று தவணையாக ரூ.5,000/- பயன் வழங்க முடிவு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. எஞ்சிய ரொக்க ஊக்கத்தொகை, பிரசவத்திற்கு பின்பாக தற்போதுள்ள திட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளின்படி மகப்பேறு நன்மை  வழங்கப்படும். இதன் மூலம் கருவுற்ற பெண் ஒருவர் ரூ.6,000/- பெறுவார்.

 

நிபந்தனைகள் மற்றும் தவணைகள்

 

தகுதியுடைய கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், ரொக்கப் பயனான ரூ.5,000/-ஐ மூன்று தவணைகளில் கீழே அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலைகளின்படி பெறுவார்கள்:

 

முதல் தவணை

·         கருவுற்றதை முன்னதாக பதிவு செய்தல்

1,000/-

இரண்டாம் தவணை

·         (கர்ப்பமுற்ற 6 மாதத்திற்கு பின்பு) குறைந்தபட்சம் ஒரு முறையாவது பிறப்பிற்கான பரிசோதனை பெற்றிருக்க வேண்டும்

2,000/-

மூன்றாம் தவணை

·         குழந்தை பிறப்பை பதிவு செய்ய வேண்டும்

·         பி.சி.ஜி., ஓ.பி.வி., டீ.பி.டி. மற்றும் ஹெப்பாடிட்டீஸ்-பீ அல்லது அதற்கு இணையான/மாற்றை, குழந்தை முதல் சுழற்சியில் பெற்றவுடன்

ரூ.2,000/-

ரொக்கப் பரிமாற்றம் நிபந்தனைகள் தொகை (ரூபாயில்)

 

     தகுதியுடைய பயனாளிகள், பிரசவத்திற்கு பின்பாக தற்போதுள்ள திட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளின்படி மகப்பேறு பயனை தொடர்ந்து பெறுவதுடன், சராசரியாக ஒரு பெண் ரூ.6,000/- பெறுவார்.

 

பயனாளிகளுக்கான ரொக்க பரிமாற்ற முறைகள்

 

இந்த கட்டமாயக்கப்பட்ட ரொக்க பரிமாற்றத் திட்டமானது, நேரடி பயன் மாற்ற முறையில் இருக்கும்.

பின்னணி:

 

இந்திய அரசு ஒவ்வொரு பெண்ணும் கருவுற்ற காலத்திலும், பிரசவ காலத்திலும் போதிய உதவி மற்றும் உடல்நல கவனிப்பை பெற உறுதி பூண்டுள்ளதுடன், தாய் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் நல்உடல்நலத்திற்கு அடிப்படையான புதிதாக பிறந்த அனைத்து குழந்தைகளும் தடுப்பூசி பெறுவதை உறுதி பூண்டுள்ளது. பொதுவாக, முதன் முறையாக கருவுற்ற பெண், புதிய சவால்கள் மற்றும் மனஅழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இத்திட்டம் தாய்மார்களின் பாதுகாப்பான பிரசவத்திற்கும், உயிருள்ள முதல் குழந்தை தடுப்பூசி பெறுவதற்கு உதவுவதை உறுதி செய்கிறது. கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான இந்த மேம்படுத்தப்பட்ட உடல்நல கவனிப்பு, தாயும், சேயும் சிறந்த உடல்நிலை தகுதியை பெற முன்னெடுத்து செல்லும்.