Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா- ருவாண்டா இடையே விமான சேவை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – ருவாண்டா இடையே விமான சேவைகள் ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா-ருவாண்டா இடையே வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கலாச்சார மாற்றம் ஆகியவற்றை பெருமளவில் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். மேலும், விமானப் போக்குவரத்து துறையிலும் வளர்ச்சி ஏற்படும். இரு நாடுகளின் விமான நிறுவனங்களுக்கும் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, வலுவான மற்றும் தடையில்லாத இணைப்பை ஏற்படுத்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும். மேலும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்.