Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா வங்காளதேசம் இடையே பெருந்திரள் ஊடகங்கள் துறையில் ஒத்துழைப்பு நல்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


இந்தியா வங்காளதேசம் இடையே பெருந்திரள் ஊடகங்கள் துறையில் ஒத்துழைப்பு நல்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சிறப்புகள்

ஒத்துழைப்பு நல்கும் குறிப்பிடத்தக்க பகுதிகள்:

i. இருநாடுகளும் பெருந்திரள் ஊடகங்கள் துறையில் பயிற்சி/படிப்பு சுற்றுலாவுக்கும், மக்கள் தொடர்புக்கும் ஏற்பாடு செய்தல்.

ii. பெருந்திரள் ஊடகத் துறையில் நிபுணர்களை பரிமாற்றிக் கொள்ளுதல்.

iii. பெருந்திரள் ஊடகங்கள் சார்ந்த கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி தொடர்பான ஒத்துழைப்பை வழங்குதல். இந்த அமைப்புகள் மூலம் வெளியிடப்பட்ட ஆராய்ச்சித் தாள்களை பறிமாறிக்கொள்ளுதல்.

iv. பெருந்திரள் ஊடக நடவடிக்கைகள் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் தகவல்களையும், அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளுதல்

v. அங்கீகாரம் பெற்ற பெருந்திரள் ஊடக பிரதிநிதிகளை துறைசார் கடமைகளை பரிமாறிக்கொள்ளும் கட்டுப்பாடுகளின் பேரில் அலுவலகங்கள் அமைக்கச் செய்து பணியாற்றச் செய்தல்.

******