Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய ஜப்பானிய தொழில் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் உரை

பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களும், ஜப்பான் பிரதமர் திரு ஷின்சோ அபே அவர்களும், புது தில்லியில் நடந்த இந்திய ஜப்பானிய தொழில் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

பிரதமர் தனது உரையில், உயர் வேக ரயில்களில் மட்டுமல்ல, உயர் வேக வளர்ச்சியிலும் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து முன்னேற வேண்டும் என்றார்.

கடந்த ஆண்டு தனது ஜப்பான் பயணத்தை நினைவு கூர்ந்த பிரதமர், இந்தியாவில் 35 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய ஜப்பான் முன்வந்ததை குறிப்பிட்டார். அந்தத் தொகை பலரை வியப்பில் ஆழ்த்தியது என்று குறிப்பிட்ட பிரதமர், ஆனால், குறுகிய காலத்துக்குள் நினைத்துப் பார்க்க முடியாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த முதலீட்டின் தடங்கள் இந்தியாவில் தெரியத் தொடங்கியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டம், இந்தியாவில் மட்டுமல்ல, ஜப்பானிலும் முன்னேறி வருவதாக குறிப்பிட்டார். கொள்கை அளவில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஜப்பான் ப்ளஸ் திட்டமும் பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்தார்.

உலகப் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்து வரும் நிலையிலும், இந்தியா மற்றும் ஜப்பானிய பொருளாதாரங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதை பொருளாதார புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா சாத்தியங்களுக்கான நாடு என்றார் பிரதமர். இந்தியாவின் பொருளாதார திருப்பு முனைகளில் ஜப்பான் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், மாருதி கார் மற்றும் பிரத்யேக சரக்குப் பாதையை உதாரணமாகக் கூறினார்.