பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, இந்திய தபால் துறை மற்றும் போர்ச்சுகல் நாட்டுத் தபால் துறை ஆகியவை இணைந்து, கூட்டு தபால் தலை வெளியிடுவது குறித்து விவாதித்தது.
இந்தியா மற்றும் போர்ச்சுகல் இடையே நல்ல நட்புணர்வு உள்ளது. இரு நாடுகளுக்கும் பொதுவாக உள்ள பிரச்சினைகளில் இணைந்து செயல்படுவதற்கும், பல்வேறு தளங்களில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கும் இந்த உறவு உதவுகிறது. இந்த உறவு இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிப்பதாகவும், இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் உதவுகிறது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் அஞ்சல் துறைகளை வளர்க்கவும், கூட்டு தபால் தலை வெளியீடு உதவுவதோடு, தபால் தலை சேகரிக்கும் பழக்கத்துக்கும் உதவியாக இருக்கும்.