Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய பாதுகாப்புக் கணக்குச் சேவையில் பணிநிலை ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்புக் கணக்குத் துறையில் பணிகள் நிலை குறித்த ஆய்வுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு புதிதாக 23 பணியிடங்களை அதிகரிக்க வழிவகுக்கும். இதில் ஒரு பணியிடம் பெரிய பதவியாக இருக்கும்.

உயர் பதவியில் ஓர் இடமும், எச்.ஏ.ஜி. (HAG) நிலையில் 6 பணியிடங்களும், எஸ்.ஏ.ஜி. (SAG) நிலையில் 6 பணியிடங்களும் அதிகரிக்கப்படும். ஜே.ஏ.ஜி. (JAG) நிலையில் 10 இடங்களும் அதிகரிக்கப்படும். “எச்.ஏ.ஜி. பிளஸ்” (HAG +) நிலையில் ஓர் இடம் குறைக்கப்படும். எஸ்.டி.எஸ். (STS) நிலையில் 12 இடங்களும் ஜே.டி.எஸ். (JTS) நிலையில் 10 இடங்களும் அதிகரிக்கப்படும்.

இந்திய பாதுகாப்புக் கணக்குச் சேவையின் செயல்பாடுகளின் தேவை, பணிநிலை அமைப்பு, அலுவலர்களின் பணி முன்னேற்றம் ஆகியவற்றின் தேவை கருதி பணிநிலை ஆய்வு செய்யப்பட்டது.