Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் சந்திப்பு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் சந்திப்பு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் சந்திப்பு


உலக மகளிர் கிரிக்கெட் கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்து கலந்துரையானார்.

மகளிர் கிரிக்கெட் அணியினரை பாராட்டி டுவிட்டரில் செய்தி வெளியிட்ட பிரதமர் ஒருவரை தாங்கள் இப்போது தான் பார்ப்பதாக வீராங்கனைகள் கூறினார்கள். தங்கள் அணியினரின் முன்னேற்றத்தை பிரதமரும் பின்தொடர்ந்து இருக்கிறார் என்பதை அறிந்து அவர்கள் பெருமையடைந்த்தாகவும், மகிழ்ச்சி அடைந்ததாகவும், எழுச்சியடைந்ததாகவும் அவர்கள் கூறினார்கள்.

தங்களுக்கு வரும் நெருக்கடியை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று பிரதமரிடம் வீராங்கனைகள் கேட்ட போது அதற்கு விளக்கமளித்த பிரதமர், யோகா பயிற்சி செய்வதன் மூலம் மனதையும், உடலையும் செயலையும் நல்ல சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது என்றார். யோகாவை பயிற்சி செய்வதால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடிகிறது என்றார்.

போட்டியில் அவர்கள் தோல்வியடையவில்லை என்று சொன்ன பிரதமர், 125 கோடி இந்தியர்களும் இந்த தோல்வியை தங்கள் தோளில் தாங்கிக் கொண்டார்கள், உண்மையில் இதுவே அவர்களது மிகப்பெரிய வெற்றி என்றார்.

இந்தியத் தாயின் மகள்கள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தேசத்தை பெருமைகொள்ளச் செய்து விட்டார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், பல்வேறு துறைகளில் பெண்கள் அடைந்து வரும் முன்னேற்றம் காரணமாக சமுதாயம் பலன் அடைந்து வருகிறது என்றார். பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் இஸ்ரோவின் பெருமைக்குரிய முயற்சிகளில் முக்கிய பங்காற்றிய மகளிர் விண்வெளி விஞ்ஞானிகள் இதற்கு முக்கிய சான்று என்று பிரதமர் குறிப்பிட்டார்.

விளையாட்டு வீராங்கனைகள் தங்கள் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை பிரதமருக்கு வழங்கினார்கள்.

***