Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் இரங்கல்


இந்தோனேசியா நாட்டில் எரிமலை வெடித்ததின் காரணமாக ஏற்பட்ட சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“எரிமலை வெடித்தபின் ஏற்பட்ட சுனாமியால் நிகழ்ந்த உயிர் இழப்புகள் மற்றும் அழிவுகள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். நமது கடல் வழி அண்டைநாடும், நமது நட்பு நாடுமான இந்தோனேசியாவின் நிவாரண பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்தியா தயாராக உள்ளது”, என்று பிரதமர் கூறியுள்ளார்.