பி.எம்.இந்தியா
அரசுமுறைப் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோ, அதிபர் மாளிகையில் இன்று பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். இந்தியாவின் 76-வது குடியரசு தினக் கொண்டாட்டங்களின் தலைமை விருந்தினராக, அதிபர் பிரபோவோ 2025 ஜனவரியில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்திற்குப் பின், இரு தலைவர்களுக்கும் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.
நேரடிப் பேச்சுவார்த்தை, உயர்நிலைப் பிரதிநிதிக்குழு அளவிலான பேச்சுவார்த்தை ஆகிய இரு வடிவங்களிலும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளை இரு தலைவர்களும் மேற்கொண்டனர். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, டிஜிட்டல் மற்றும் நிதி தொழில்நுட்பம், எரிசக்தி, சுகாதாரம், மருந்துத் தொழில், விண்வெளி, முக்கிய கனிமங்கள் மற்றும் அரிய கனிமங்கள், கலாச்சாரம், சுற்றுலா, விவசாயம், மக்கள் பரிமாற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான உத்திசார் கூட்டாண்மையின் முழு நிலையையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
இந்தியாவின் ‘டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தநிலை மின்வணிக கட்டமைப்பை’ அடிப்படையாகக் கொண்ட ‘இந்தோனேஷிய திறந்தநிலை மின்வணிக கட்டமைப்பு’ தொடங்கப்பட்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர். 2027-ல் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் இந்தோனேஷியப் பயணத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வை “கலாச்சார மற்றும் கல்வி சார்ந்த ராஜீய உறவுக்கான தாகூர்-தேவந்தரா ஆண்டாக” இரு நாடுகளும் இணைந்து கொண்டாடும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள் மற்றும் அரிய கனிம வகைகள், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, தேர்தல் நடைமுறைகள், தொலைத்தொடர்பு, விவசாயம், கடல்சார் பாதுகாப்பு, விண்வெளி, எஃகு விநியோகத் தொடர், பேரிடர் மேலாண்மை, மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறை, சுகாதாரப் பணியாளர் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்பாடுகள் தலைவர்கள் முன்னிலையில் பரிமாறப்பட்டன. யோக்யகர்த்தாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பிரம்பனன் கோயில் வளாகத்தின் பாதுகாப்புக்கும் புனரமைப்புக்கும் இந்தியாவின் ஆதரவு விருப்பக் கடிதமும் பரிமாறப்பட்டது.
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அதிபர் பிரபோவோ பிரதமரை கெளரவிக்கும் வகையில் மதிய விருந்து அளித்தார். அதிபர் பிரபோவோவின் கனிவான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அவரை இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281978®=3&lang=1
***
SS/SMB/SH
PM @narendramodi and President @prabowo held extensive talks at Istana Merdeka in Jakarta.
— PMO India (@PMOIndia) July 7, 2026
The leaders reviewed the growing momentum in India-Indonesia ties and discussed cooperation in trade, healthcare, agriculture, food security, defence, security and maritime affairs.
They… pic.twitter.com/6QBs2ljA0W
Held productive discussions with President Prabowo Subianto at Istana Merdeka in Jakarta. Over the past few years, India-Indonesia relations have acquired new momentum and greater depth. Today’s talks covered various subjects such as trade, human development, agriculture, food… pic.twitter.com/FvVqXEpDDZ
— Narendra Modi (@narendramodi) July 7, 2026
Looking at the future, we agreed that our nations must work closely in areas such as space, telecommunications, artificial intelligence, Digital Public Infrastructure and other emerging technologies. pic.twitter.com/PWOf3mgtbs
— Narendra Modi (@narendramodi) July 7, 2026
Telah melaksanakan diskusi yang produktif bersama Presiden Prabowo Subianto di Istana Merdeka, Jakarta. Dalam beberapa tahun terakhir, hubungan India-Indonesia telah memperoleh momentum baru dan cakupan yang lebih mendalam. Pembicaraan hari ini mencakup berbagai bidang seperti… pic.twitter.com/w4igar20lk
— Narendra Modi (@narendramodi) July 7, 2026
Melihat ke depan, kami sepakat bahwa kedua bangsa kita harus bekerja sama secara erat di berbagai bidang seperti antariksa, telekomunikasi, kecerdasan buatan, Infrastruktur Publik Digital, serta teknologi digital terbarukan lainnya. pic.twitter.com/r7DXJQxnBw
— Narendra Modi (@narendramodi) July 7, 2026