பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இன்ஸ்ட்ருமென்டேஷன் நிறுவனத்தின் கோட்டா பகுதியில் உள்ள கிளையை மூடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இன்ஸ்ட்ருமென்டேஷன் நிறுவனத்தின் பாலக்காடு கிளையை கேரள அரசிடம் ஒப்படைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையொட்டி, இன்ஸ்ட்ருமென்டேஷன் நிறுவனத்தின் கோட்டா பிரிவு ஊழியர்களுக்கு 2007ம் ஆண்டு ஊதியத் திட்டத்தின் அடிப்படையில், விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்./வி.எஸ்.எஸ்.) வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில், ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளம், மற்ற பாக்கிகளும் வழங்கப்படும். இதன்படி, தோராயமாக ரூ.438 கோடி வழங்கப்படும்.